Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-12-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 30-Dec-2021

இன்றைய தியானம்(Tamil) 30-12-2021

 

நிதானித்து அறிவோம் 

 

“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” -1கொரி. 11:31

 

தேவன் நமக்கு எவ்வளவு அழகிய வாழ்க்கையைக் கொடுத்துள்ளார். ஆனாலும் இதிலே என்ன முறுமுறுப்பு? வாழ்வின் மதிப்பை அறியாமல் எத்தனை முறை சலிப்போடு இருந்திருக்கிறோம். நாம் ஒவ்வொருநாளும் காலை எழும்பும் போது 86,400 விநாடிகள் நமக்குக் கொடுத்துள்ளார். அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு எத்தனை விநாடிகள் (86400×360) சிந்திப்போம். இத்தனையும் பணமாக நம் கையில் கொடுக்கப்பட்டிருந்தால், அதனை வெகு கவனத்துடன் செலவழித்திருப்போம். செலவழிக்காத பணம் நம்மிடம் இருக்கும். ஆனால் செலவழிக்காத விநாடிகள் நம்மிடம் இருப்பதும் இல்லை, அவற்றைத் திரும்பப் பெறவும் இயலாது. ஆதலால் பணத்தை விட நேரம் மதிப்புமிக்கது. ஒவ்வொரு நாளும் 86400 விநாடிகளை பெற்ற நாம் என்ன செய்துள்ளோம் என சிந்திப்போம். 

 

அது மாத்திரமல்ல, ஒரு வருடத்தில் மொத்த மணிநேரங்கள் 8760. அதில் வேலை செய்வதற்கு 2920 மணிநேரங்கள், தூக்கத்திற்கு 2920 மணிநேரங்கள். இவை போக மீதியுள்ளது அதேபோல 2920 மணிநேரங்கள்! ஞானமுள்ள தேவன் சரிசமமாக பிரித்துக் கொடுத்துள்ள இந்த மீத மணிநேரங்களை மனிதன் தன்னை நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்தவே தந்துள்ளார். இந்த நேரத்தை நாம் எப்படி கழித்தோம்? சிந்திப்போம். 

 

நம்மை நாமே நிதானித்து அறிந்தோமானால் நியாயந்தீர்க்கப்படோம் என வேதம் கூறுகிறது. நாம் வேதத்தின் வெளிச்சத்தில் நிதானிக்கும்போது நம் இருதயம் உணர்வடையும். நாம் இந்த ஆண்டில் வேதவாசிப்பு, ஜெபம், மனிதர்களோடு உள்ள உறவு, வீட்டின் காரியங்கள், படிப்பின் காரியங்களிலே நாம் கிறிஸ்துவின் சீஷனாக, சீஷியாக என்ன செய்துள்ளோம்? எதை மேம்படுத்தியுள்ளோம்? இவற்றில் ஏதாவது ஒன்றில் முன்னேற்றம் உண்டா? இல்லையெனில் இத்தனை மணிநேரங்களை வீணாக்கி விட்டோமா? உணர்வுள்ளவர்களாக தேவனிடம் மன்னிப்பு கேட்போம். நம்மை சீர்படுத்துவோம். இவற்றில் ஏதாவது ஒன்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றால் எல்லாவற்றிலும் முன்னேற்றம் ஏற்பட திட்டமிடுவோம். செயல்படுவோம். 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு: 

இந்த 2021ம் ஆண்டு முழுவதும் நம்மை கண்மணிபோல் பாதுகாத்து தேவன் வழிநடத்தி வந்த தயவிற்காக ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet