Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-12-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 28-Dec-2021

இன்றைய தியானம்(Tamil) 28-12-2021

 

யாரும் பெறலாம் 

 

“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.... அவர்களில் பிரதான பாவி நான்.” – 1தீமோ 1:15 

 

ஒருநாள் ஒரு வாலிபப் பெண்ணுக்கு சுவிசேஷம் சொல்ல முற்படும்போது, அவள் தன்னை ஒரு கிறிஸ்தவ பிள்ளை என்று சொன்னாள். அவளிடத்திலே தொடர்ந்து பேசும்போது, “இரட்சிக்கப்பட்டு இருக்கிறாயா?” என்று கேட்டபோது, அவள் உடனே “நான் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்? நான் பிறந்ததிலிருந்து கிறிஸ்தவளாய்த்தான் வளர்க்கப்பட்டேன். பின்பு எனக்கு ஏன் இரட்சிப்பு தேவை?” என்று கேட்டாள். அவளிடத்தில் இரட்சிப்பு என்றால் என்ன என்று கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை. உடனே அவளிடத்தில், “அவர் சிலுவையில் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்திமரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த உலகத்தோடு நம்முடைய வாழ்க்கை முடிவடைந்து விடும் என்றால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வர தேவையில்லை; இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கமே ஒவ்வொருவரும் பாவமன்னிப்பு பெற்று இரட்சிப்பு அடைய வேண்டும் என்பதற்காகத்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் பரலோகத்திற்கு போவார்கள். அப்படி பாவத்திலேயே இருந்து விட்டால் நரகத்திற்கு போவார்கள். எனவே ஒவ்வொருவரும் பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாய் இருக்கிறது” என்று சொன்னபோது, அவள் சொன்ன பதில் “நான்தான் பாவமே செய்யவில்லையே” என்று சொன்னாள். வேதம் சொல்லுகிறது, 1யோவான் 1:8ல் நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. இதை அறியாமல் என்னில் பாவமே இல்லை நான் ஏன் இரட்சிக்கப்படவேண்டும் என அநேகர் எண்ணிக் கொள்ளுகிறார்கள். அப்படி அல்ல அவரிடத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு மீட்பு பெற்றிருக்கவேண்டும்.

 

பிரியமானவர்களே! இன்றைக்கும் இப்படிப்பட்டவர்கள் உண்டு. நாங்கள் சந்ததி சந்ததியாய் கிறிஸ்தவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் இரட்சிக்கப்பட்டீர்களா என்று கேட்கும்போது இல்லை என்பார்கள். வேதத்தில் நாம் பார்க்கும்போது இயேசுகிறிஸ்து யோவான் 3:3ல் நிக்கொதேமுவிடத்தில் இப்படியாக சொல்கிறார், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற்று கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறக்கிற அனுபவத்தை பெற்றுக்கொள்வோம். இதை வாசிக்கின்ற நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்கு இரட்சிப்பைத் தர ஆயத்தமாயிருக்கிறார். அவரது இரட்சிப்பை யாரும் பெறலாம். புதுவருடம் துவங்கும்வரை தாமதிக்க வேண்டாம். இன்றே இப்பொழுதே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

- P.V. வில்லியம்ஸ் 

 

ஜெபக்குறிப்பு:

7000 ஊழியர்கள் மூலம் 1இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்படும் திட்டத்தில் எல்லா மாநிலங்களில் இருந்தும் 12 பேர் முதற்கட்டமாக நம்முடன் இணைய ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş jojobet jojobet bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş