By Village Missionary Movement
Monday, 20-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 20-12-2021
அனுபவியுங்கள்! அறிவியுங்கள்!!
“கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.” – லூக்கா 2:17
உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் காதுகளினால் அநேக செய்திகளைக் கேட்கிறார்கள். கேட்டது நல்லதோ, கெட்டதோ ஆனால் அதை எப்படியாவது பார்க்க வேண்டும், அதாவது தங்கள் சொந்த அனுபவத்தில் அனுபவிக்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறார்கள். மூன்றாவதாக ஒரு காரியம் நடக்கிறது அதுதான் அறிவிப்பது! அதாவது மற்றவர்களுக்கு share செய்வது! இன்றைய சமூக ஊடகங்களில் (social media) இதுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. தங்களுக்கு பயனுள்ளதாக இருந்த செய்தியை அநேகருக்கு share செய்துவிட வேண்டுமென்று குறியாய் இருக்கிறார்கள். Social media -க்களின் மூலமாக எங்கோ ஒரு மூலையில் எடுக்கப்படுகின்ற பதிவுகள் உலகம் முழுவதும் வைரலாகி விடுகின்றது.
பரிசுத்த வேதாகமத்தின் லூக்கா 2-ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கிறார்கள். மேய்ப்பர்கள் அதை கவனத்துடன் கேட்டனர். கேட்ட பின்பு மேய்ப்பர்கள் தங்களுக்குள்ளே பேசி, ஆலோசனை செய்கிறார்கள். தாமதம் பண்ணாமல், கடுமையான குளிர்காலம் என்றும் பாராமல் தீவிரமாய் போய் மரியாளையும், யோசேப்பையும், இயேசு கிறிஸ்துவையும் கண்டார்கள். அடுத்து அவர்கள் செய்ததுதான் மிக முக்கியமான காரியம். தாங்கள் கேட்டதை கண்டதை பிரசித்தம்பண்ணினார்கள். என்னே ஒரு முன்மாதிரி! கேள்விப்பட்ட யாவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மேய்ப்பர்கள் இயேசுவின் பிறப்பை share செய்தார்கள்.
நண்பர்களே! இன்றைக்கு நமது நிலை என்ன? தேவனையும் தேவனைப் பற்றிய காரியங்களையும் ஆர்வமாய் கேட்கிறோமா? அதன்பின்பு அதனை நானும் அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறோமா? அல்லது விட்டுவிடுகிறோமா? மூன்றாவதாக, அதை பிறருக்கு அறிவிப்பதில் எந்த அளவு நாம் துரிதமாய் செயல்படுகிறோம். இதை எழுதும்போது தேவ ஊழியர் எமில் ஜெபசிங் கூறிய கூற்று என் நினைவிற்கு வருகிறது, “இயேசுவை அறிந்து, அனுபவித்து, அறிவிக்க வேண்டும்” ஆம், நமது கைகளில் ஸ்மார்ட்போன் என்ற உலகத்தையே வைத்திருக்கிறோம். அதில் வீணாக நேரத்தை செலவழிக்காமல், ஆண்டவரைப் பற்றிய காரியங்களைப் பிறருக்கு அதிக அளவில் share செய்வோம். இயேசுவைப் பற்றின காரியங்களை உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் வைரலாக்கி விடுவது நமது கைகளில்தான் உள்ளது. உணர்ந்து செயல்படுவோம்! உலகை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்!
-T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நம்முடன் இணைந்து ஊழியம் செய்யும் தோழமை மிஷனெரிகளை பணித்தளங்களில் தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250