Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-12-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 19-Dec-2021

இன்றைய தியானம்(Tamil) 19-12-2021 (Kids Special)

 

தேவன் விரும்பும் கிறிஸ்துமஸ் 

 

“…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” – 2 கொரிந்தியர் 5:17

 

Hello குட்டீஸ், கிறிஸ்துமஸ்-க்கு இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது. ஜாலிதானே! Xmas எல்லாரும் கொண்டாடலாம். ஆனால் Jesus விரும்புகின்ற X-mas ஆக இருக்கணும். அப்படித்தானே! சரி இன்றைக்கு வண்ணத்துப்பூச்சி கதை கேட்கலாமா?  

 

கலர்கலராய் அழகாய் பறக்கும் பட்டாம் பூச்சியை எல்லாம் ரசிப்பாங்க இல்லையா? நீங்களும் பட்டாம்பூச்சியை பிடித்து விளையாடி இருக்கீங்கதானே! ஒரு பட்டாம்பூச்சிக்கு எல்லோர் மனதில் யோசிப்பதெல்லாம் கேட்கக் கூடிய வரம் கிடைத்ததாம். அதிகாலையில் சேவல் கூவும் சத்தம் கேட்டு கண்விழித்த பட்டாம்பூச்சி கிறிஸ்துமஸ் ஆராதனையில் ஆபிரகாம் என்ற தம்பி பக்கத்தில் இருந்ததாம். ஆராதனை முடிந்ததும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாக இருக்க நினைத்தானாம் ஆபிரகாம். “இவன் மனசெல்லாம் பட்டாசுதான் இருக்கிறது” என்று நினைத்து மேரி அருகில் வந்ததாம். “எல்லார் dress -சையும் விட நான்தான் காஸ்ட்லியான dress, நெக்லஸ் எல்லாம் போட்டிருக்கேன்” என்று மேரி நினைத்தாளாம். “இவள் மனசெல்லாம் dress நகைதான் இருக்கிறது” என்று பட்டாம்பூச்சி நினைத்தது. மலர் அக்கா பக்கத்தில் வந்ததாம், “இந்த வருஷம் ஆலயத்திற்கு வந்ததிலேயே நான்தான் super ரா மேக்கப் போட்டிருக்கேன். எல்லாரும் என்னோட நெக்லஸை பார்த்து பாராட்டுவாங்க” என்று பெருமிதப்பட்டாங்க. “ச்சே பெரியவங்க மனதிலும் இப்படித்தான் இருக்கு” என்று நினைத்த பட்டாம்பூச்சி சுற்றிலும் பார்த்ததாம். நிம்மி என்ற குட்டி பிள்ளை அழுது கொண்டிருந்தாள். “இந்த அழுமூஞ்சி கிட்டபோனா என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது” என்று நினைத்து வெளியே உள்ள செடியில் வந்து அமர்ந்தது. 

 

இங்கே இருக்கிற அநேகர் வசதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். யார் பெரிய பணக்காரர் என யோசித்தது பட்டாம்பூச்சி. ஆராதனை முடிந்ததும் எல்லாரும் வெளியே வர ஆரம்பித்தார்கள். அப்போது நிம்மிதான் பணக்காரி என காண்பித்தார் தேவன். “காஸ்ட்லியான எதுவுமே அவளிடம் இல்லையே” என்று பட்டாம்பூச்சி கேட்டது. “விலையேறப்பெற்ற நானே அவளின் இருதயத்தில் இருக்கிறேனே! அவள், நான் அவளது உள்ளத்தில் பிறக்கும்படி அழுது ஜெபித்தாள். எல்லாரும் என்னை மறந்து கிறிஸ்துமஸை கொண்டாடுகிறார்கள்” என்று ஆண்டவர் சொன்னதும் அவருடைய உள்ளத்தை புரிந்து கொண்டது பட்டாம்பூச்சி. 

 

குட்டி தம்பி - தங்கச்சி கதையை கேட்டீங்கள்ல, ஆண்டவரோட உள்ளத்தை தெரிந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போ எப்படி X-mas -ஐ கொண்டாடபோறீங்க? இயேசுவோடவா ? அல்லது வெறும் கொண்டாட்டமா?

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş