By Village Missionary Movement
Sunday, 12-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 12-12-2021 (Kids Special)
Daddy வராவிட்டால்....
“வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.” – சங்கீதம் 121:2
செல்ல குட்டிகளே! X-mas என்றாலே சந்தோஷம்தான். X-mas tree இதன் அழகே தனிதான். உங்க friends வீட்டிலும் போய் பார்த்து ஜாலியாக இருப்பீங்கதானே? ஆனா எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் மறக்காம உதவி செய்யணும் Ok வா. சரி, கதை கேட்கலாமா?
ஒரு அழகான கிராமத்தில் ஒரு குடும்பத்துல சிஜி, செல்சி என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அப்பா இராணுவத்தில் இருப்பதால் அடிக்கடி அவரைப் பார்க்க முடியாது. அப்பா leave -க்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் சிஜி, செல்சி கூட Jolly -யாக விளையாடுவார். தேவையானதெல்லாம் வாங்கிக்கொடுப்பார். ஆனால் சில மாதங்களாக அப்பாவிடம் இருந்து Phone, letter பணம் எதுவுமே வராததால், அம்மா வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தாங்க. அந்த பணம் X-mas-க்கு dress எடுக்கவோ, decorations பண்ணவோ போதுமானதாக இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. செல்சிக்கு அப்பாவை நினைத்து, நினைத்து காய்ச்சலே வந்து விட்டது. மருந்து வாங்க கூட பணம் இல்லாததால் யாரிடம் உதவி கேட்பது என்று அம்மா யோசித்துக் கொண்டிருந்தாங்க. உடனே சுஜி சொன்னா, “அம்மா இயேசப்பாவிடம் உதவி கேட்போமே!” என்று. உடனே அனைவரும் நம்பிக்கையோடு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். ஆச்சரியம்! செல்சி காலையில் எழுந்து விளையாட ஆரம்பித்து விட்டாள். காய்ச்சலும் சரியாகிவிட்டது. இன்னும் கிறிஸ்துமசுக்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. பிள்ளைகளுக்கு புது டிரஸ் கூட எடுக்கலையே என்று நினைத்து, அம்மா வருத்தப்பட்டாங்க. “இயேசப்பா நிச்சயம் நம் தேவைகளையெல்லாம் சந்திப்பாங்கம்மா கவலைப்படாதீங்க” என்று சுஜி சொன்னபோது இயேசப்பாவே பேசுவதைப் போல இருந்தது அம்மாவுக்கு! அன்று குடும்ப ஜெபத்தில் இரவு சுஜி ஜெபம் பண்ணினாள். நீங்களும் குடும்ப ஜெபம் செய்வீங்களா? Super. காலையில் எழும்பும்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தால், அப்பா நின்று கொண்டிருந்தார். கையில் புத்தாடை, பரிசுப் பொருட்கள் எல்லாம் வைத்திருந்தார். பிள்ளைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அம்மா கண்களை மூடி, “தேவையான நேரத்தில் என் தேவைகளையெல்லாம் சந்தித்தீரே உமக்கு நன்றி” என்று ஜெபித்து விட்டு எல்லோரும் தூங்கி விட்டாங்க. இயேசப்பாவுக்கு நன்றி சொன்னார்கள். குடும்பமாய் ஆலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸை சந்தோஷமாய் கொண்டாடினாங்க.
என்ன குட்டி தங்கங்களே! நீங்களும் எனக்கு டிரஸ் எடுக்கலையே! அப்பாவுக்கு வேலை இல்லையே! எனக்கு உதவி செய்ய யாருமில்லையே என்று கவலையோடு இருக்கிறீர்களா? கவலையே வேண்டாம்! நமக்காக இந்த பூமிக்கு வந்த உலக இரட்சகர் தேவைகளை தராமல் இருப்பாரா? நிச்சயம் தருவார். உங்கள் கண்கள் அவரையே பார்க்கட்டும். Happy “X” mas.
- A. Beulah
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250