By Village Missionary Movement
Saturday, 11-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 11-12-2021
விரைவில் பதில்
“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” – சங்கீதம் 126:5
கிறிஸ்துவை அறியாத பொற்கொல்லன் ஒருவன் இருந்தான். அவன், “எந்த மனிதனும் என்னிடம் கிறிஸ்துவை குறித்து சொல்லவே முடியாது. நான் வாதிட்டு அவர்களின் வாயை அடைத்து விடுவேன்” என்று சவால் விட்டு கூறிக் கொண்டிருந்தான். இதை அறிந்த அதே ஊரைச் சார்ந்த வயதான சபை மூப்பர் ஒருவர், இந்த மனிதனை நினைத்து ஒவ்வொரு நாளும் மிகுந்த பாரத்தோடு தன் மனைவியோடு சேர்ந்து ஜெபித்து வந்தார்கள். ஒரு நாள் எதேச்சையாக இந்த மனிதனை சந்திக்க நேர்ந்த போது, “நண்பனே, நானும் என் மனைவியும் உனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறும்போது இருதயத்தில் இருந்த பாரத்தினால் அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது. அதற்குமேல் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.
இந்த மூப்பரின் வார்த்தைகளும், கண்ணீர் நிறைந்த கண்களும் பொற்கொல்லனின் இருதயத்தை அசைத்தது. மீண்டும் மீண்டும் மூப்பரின் தோற்றம் அவன் கண்முன் தோன்றவே நேராக அவரின் வீட்டிற்கு சென்று, “என் மனதில் ஏதோ மாற்றம் உண்டாயிருக்கிறது. திரும்ப திரும்ப உங்களின் கண்ணீர் நிறைந்த கண்கள் என் மனக்கண்ணிற்கு முன்பாக வந்து கொண்டிருக்கின்றது” என்று தன் மனதில் உள்ளதையெல்லாம் சொல்லி அழுதான். அது மாத்திரமல்ல தன்னை தாழ்த்தி முழங்கால்படியிட்டான். இனம்புரியாத தேவ சமாதானமும், ஆறுதலும் அவன் உள்ளத்தை நிறைத்தது. அன்றே கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான்.
அன்பானவர்களே! நாமும் நம்மை சுற்றியுள்ள ஜனங்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க விரும்புகிறோம், வாய்ப்பைத் தேடுகிறோம். அதே வேளையில் இந்த ஆத்துமாக்களை குறித்ததான பாரம் நிறைந்த இருதயத்தோடும், கண்ணீரோடும் ஜெபிக்க நாம் தவறுவோமேயானால் அவர்களின் உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. நம்முடைய முயற்சிகள் யாவும் பயனற்றதாகிவிடும். இயேசு கிறிஸ்துவும் ஜனங்களின் மனந்திரும்புதலுக்காக பிதாவை நோக்கி பாரத்தோடும், கண்ணீரோடும் ஜெபித்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாமும் ஜெபித்து செயல்படும்போது, வாய்ப்புகளை கர்த்தர் ஏற்படுத்தித் தந்து ஜனங்கள் இயேசுவை அறிகிற அறிவில் நிரப்பப்பட, கண்கள் திறக்கப்பட அந்த நற்செய்தியானது அவர்களின் இருதயத்தில் செயல்படுவதற்கு பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வார். நாம் மறைமுகமாக அறைகளுக்குள் விடும் கண்ணீருக்கு நம் தேவன் நிச்சயமாய் வெளியரங்கமாய் பதிலளிப்பார். ஆமென்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜ் மற்றும் ஊழியர் கூடுகைகளுக்கு சமையல் செய்ய “Wood Steamer boiler” வாங்க ரூ. 4 லட்சம் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250