By Village Missionary Movement
Sunday, 05-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 05-12-2021 (Kids Special)
இயேசுவோடு நடந்தால்
“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்...” -1தீமோ.1:15
டிசம்பர் மாதம் வந்தாச்சி, கிறிஸ்துமஸை எல்லாரும் ஆசையாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? பட்டாடை, பலகாரம், பல வண்ண விளக்குகள்.... என சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடலாம். ஆனால் Jesus விரும்புகின்ற காரியங்களை செய்தால்தான் அவர் சந்தோஷப்படுவார். சரி, இன்றைக்கு ஜெரோம் என்ற uncle மாட்டுக் கொட்டகையை எப்படி தியானித்தார் என்று கேட்போமா?
யார் இந்த ஜெரோம் uncle? பல நூற்றாண்டுகளுக்கு முன் வேதப்புத்தகத்தை முதன் முதலில், லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர். அவர் இயேசு பிறந்த பெத்லகேமின் மாட்டுக் கொட்டகையை தியானித்துக் கொண்டே மொழி பெயர்த்தபோது இயேசு கிறிஸ்து பாலகனாக ஜெரோம் uncle கூட நடந்து வருவதைப் போல உணர்ந்தார். அவருடைய உள்ளமெல்லாம் ஆனந்த சந்தோஷத்தால் பரவசமடைந்தது. குட்டீஸ் நீங்களும் Jesus உங்க கூட இருப்பதை நினைத்து பார்த்திருக்கீங்களா? very good. இயேசப்பா கூட ஜெரோம் பேசினாங்க, “என் அருமையான இயேசு பாலகா, என் முழு இருதயத்தோடு உமக்கு ஒரு காணிக்கை கொடுக்க விரும்புகிறேன். என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
“எல்லாமே என்னிடத்திலிருக்கிறதே! வானமும், பூமியும் என்னுடையது, எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்று இயேசு பாலகன் சொன்னாங்க. “இல்லை அப்படி சொல்லாதீங்க. நான் உம்மை அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பை வெளிப்படுத்தும்படி, ஏதாவது என் கையிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜெரோம் மன்றாடினார். பாலகனான இயேசுவோ, அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ என்னை நேசித்தால், உன் பாவங்களை எனக்குத்தா. உன் தவறான சிந்தனைகள், அருவருப்பான பாவங்களையெல்லாம் என்னிடம் தந்துவிடு, நான் அவைகளையெல்லாம் சிலுவையிலே சுமக்கிறேன். என் இரத்தத்தை சிந்தி உனக்காக மரிக்கிறேன்” என்றார். இந்த வார்த்தைகள் ஜெரோம் uncle உள்ளத்தை உடைத்தது. கதறி அழுதார். தான் இயேசுவுக்கு கொடுக்கும் பரிசு எத்தகையது என்பதை உணர்ந்தார். கண்ணீரை அவரால் அடக்க முடியவில்லை. பாவங்கள் மன்னிக்கப்பட்டவராய், இயேசு தன் உள்ளத்தில் பிறந்த சந்தோஷத்தை அனுபவித்தவராய் பெத்லகேமின் மாட்டுக்கொட்டகையை தியானித்து முடித்தார்.
என்ன குட்டீஸ்! இயேசு ராஜா கூட பேச ஆசையா? பேசிப்பாருங்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விட, உங்க உள்ளத்தில் பிறக்கத்தான் ஆசைப்படுவார். அழுக்கான உள்ளத்தை ஆண்டவருக்கு கொடுத்துப் பாருங்க. உண்மையான கிறிஸ்துமஸை உற்சாகமாய் கொண்டாடுவீங்க. எல்லையில்லாத சந்தோஷத்தோடு.... செல்லக்குட்டிகளே! Readyதானே!
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250