Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01-12-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 01-Dec-2021

இன்றைய தியானம்(Tamil) 01-12-2021

 

உள்ளே வெளியே 

 

“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” – யோவான் 1:9 

 

இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் பகுதிகளில் ஒன்றிரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வந்தனர். டிசம்பர் மாதம் முழுவதும் அவர்கள் தங்கள் வீடுகளில் போட்டிருக்கும் வண்ண நட்சத்திரம், மின்விளக்குகளால் அலங்காரம் மற்றும் கிறிஸ்துமஸ் Tree ஆகியவற்றைக் கண்டு சந்தோஷப்படுவேன். குறிப்பாக கேரளாவை சேர்ந்த ஒரு ஆசிரியர் குடும்பம் என்னையும் என்னுடன் இருந்த ஒரு சிலரையும் தங்கள் வீட்டிற்கு வரவழைத்து சில இனிப்புப் பண்டங்களை கொடுத்தும், அழகிய கிறிஸ்துமஸ் பாடல்களையும் பாடி ஜெபித்து அனுப்புவார்கள். சிறுபிராயத்தில் நடந்த இச்சம்பவத்தை அனேக நாட்களாக என் மனதிற்குள்ளாக நினைத்து நினைத்து சந்தோஷப்படுவேன். என்றாவது ஒருநாள் நம்முடைய வீட்டிலும் ஸ்டார் கட்ட வேண்டும் என்று உள் மனதில் ஆசைப்பட்டதும் உண்டு. ஆனால் நான் கிறிஸ்தவன் இல்லையே. 

 

சில காலங்கள் உருண்டோடின. இருதய விருப்பத்தை நிறைவேற்றும் தெய்வம் இயேசு என் ஆசைகளை நிறைவேற்றினார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாம் இயேசு கிறிஸ்து என் உள்ளத்தில் வந்துதித்தார். ஒரு நட்சத்திரம் யாக்கோபில் இருந்து உதிக்கும் என்று வாசிக்கிறோம். முன்பு இந்த நட்சத்திரத்துக்கு வெளியே இருந்தேன். இப்பொழுது நட்சத்திரமாம் இயேசுவுக்குள் காணப்படுகிறேன். என்னிலிருந்த பாவ இருள் விலகி, மகிமையின் வெளிச்சத்தில் நிலைத்திருக்க ஆண்டவர் கிருபை செய்துள்ளார். இப்பொழுது எனக்கு தினமும் கிறிஸ்துமஸ்தான். 

 

இதை வாசிக்கின்ற உங்கள் ஒவ்வொருவரையும் இயேசு நேசிக்கின்றார். நீங்கள் கிறிஸ்தவராகவோ அல்லது யாராகவோ இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே ஆண்டவராகிய இயேசு விரும்புகிறார். இயேசுவின் பிறப்பை முன்னிட்டு சொல்லும் நற்செய்தியில், “இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று வானத்திலிருந்து தூதர்கள் மூலம் செய்தி சொல்லப்பட்டது. அந்த சந்தோஷ வெளிச்சமாகிய இயேசு நமக்குள் இருப்பாரென்றால் நம் வாழ்க்கை முழுவதும் வெளிச்சமும் சந்தோஷமும் நிரம்பி காணப்படும். இந்த சிறிஸ்துமஸ் நாட்களில் இந்த செய்தியின் மூலம் இயேசு உங்களை அழைக்கின்றார். நீங்கள் அவரண்டை வாருங்கள். நீங்கள் இந்த வெளிச்சத்திற்கு புறம்பாயிருக்க வேண்டாம், உள்ளே வாருங்கள். தினமும் கிறிஸ்துமஸ்தான். வாருங்கள் கொண்டாடுவோம்! 

- P. ஜேக்கப் சங்கர்   

 

ஜெபக்குறிப்பு:

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al