Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  10-01-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 10-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  10-01-2021 (Kids Special)

தேவையானது ஒன்றே 

“தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.” – லூக்கா 10:42

புதிய ராஜா ஒரு நாட்டை ஆளும்படி பதவி ஏற்றார். தனது அரசவை காரியங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தினார். மனதிலே ஒரு தீர்மானம் எடுத்தார். எனக்கு நேரம் கிடைக்கும்பபோதெல்லாம் நாட்டின் முக்கிய வீதிகளுக்குள் சென்று மிகவும் வறுமையில் இருக்கும் நபருக்கு நானே உதவி செய்வேன் என்று முடிவெடுத்தார். ஒரு நாள் அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ஒரு மனிதனைச் சந்தித்தார். கிழிந்த உடை, எண்ணையையே கண்டிராத தலை, உணவு இல்லாததால் மிகவும் மெலிந்து, கை கால்களில் புண்களோடு கையேந்தியபடியே உட்கார்ந்திருந்தான். அருகில் சென்று உனக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். 

அந்த மனிதன் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் தன் நிலையை உணர்ந்தவனாக, “ஐயா, உங்களுடனேயே நான் இருக்க வேண்டும்” என்று கூறினான். அவர் உடனே அவனைத் தன் ரதத்தில் ஏற்றிக்கொண்டார். அரண்மனைக்கு வந்து வேலைக்காரர்களை அழைத்து, “இவரது தலை முடியை நன்றாக வெட்டி, நன்றாகக் குளிப்பாட்டி, நல்ல விலை உயர்ந்த உடைகள் போட்டு, எண்ணெய் பூசி, புண்களுக்கெல்லாம் மருந்து போடுங்கள். அரசவையில் ஒரு இடமும், அரண்மனையில் ஒரு இடமும் ஆயத்தம் பண்ணுங்கள்” என்று கட்டளை கொடுத்தார். 

வேலைக்காரர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்.  இவனுக்கென்ன இவ்வளவு மவுசு என்று! அவன் சொன்னான், “என்னைத் தேடி இதுவரை ஒருவரும் வந்தது கிடையாது. நான் பலரிடம் சென்று ஏமாந்து வந்திருக்கிறேன். எனவே என்னைத் தேடி வந்தவரின் அன்பு உள்ளத்தைப் புரிந்து கொண்டு அவருடனே இருக்க விரும்பி கேட்டேன். அவர் என்னை ஏற்றுக்கொண்டார்” என்றான். வேலைக்காரர்கள் நாம் ராஜாவுடைய அரண்மனையில்தான் வேலை செய்கிறோம். ஆனால் ஒருநாள் கூட நாம் இராஜாவுடன் இருக்கவேண்டும் என்று விரும்பினதில்லையே. ஆனால் இவனுக்கு இந்த பாக்கியம் கிடைத்துவிட்டதே! என்று கவலை கொண்டனர். 

அன்பான குட்டிப்பிள்ளைகளே! நாம் ஆலயம் செல்லலாம், ஜெபிக்கலாம், வேதம் வாசிக்கலாம். ஆனால் இயேசுவோடு இருக்க விரும்பி கேட்டால் அவர் இரத்தத்தால் நம்மைக் கழுவி, இரட்சிப்பின் வஸ்திரம் தந்து, வேண்டாத எல்லா அசுத்தங்களையும் நம்மைவிட்டு சுத்திகரித்து, அவர் கூடவே இருக்கும்படி நம்மை தகுதிப்படுத்துவார். இன்றே கேட்போமா! 
-    Sis. தெபோராள்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al