Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-11-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 28-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 28-11-2021 (Kids Special)

 

பெரிய குடை 

 

“கர்த்தர் நன்மையானதைத் தருவார்;…” – சங்கீதம் 85:12

 

Hello குட்டி செல்லங்களே! How are you? மழைக்காலம் வந்துவிட்டது. Jolly யாக இருக்கும்தானே! மழையில் குளிக்கலாம், வேடிக்கை பார்க்கலாம், விளையாடலாம். உங்களுக்கும் மழையென்றால் ரொம்ப பிடிக்கும்தானே! 

 

துரை என்ற குட்டி தம்பி சுறுசுறுப்பா அம்மா சொன்ன பேச்சை கேட்கின்ற பிள்ளையாக இருப்பான். ஒருநாள் துரையை அம்மா பக்கத்து தெருவிலுள்ள கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக அனுப்பி வைத்தார்கள். கடைக்கு போவது, அம்மாவுக்கு உதவி செய்வது துரைக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் அம்மாவுக்கு help பண்ணுவீங்களா? good. துரை கடைக்கு போய் திரும்புவதற்குள் மழை அதிகமாய் பெய்ததால், நனைந்து கொண்டே வந்தான். அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. ஐயோ பிள்ளைக்கு சளி பிடித்து விடுமோ? என்று நினைத்து அம்மா தலையை நன்றாக துடைத்து விட்டு, coffee போட்டு கொடுத்தார்கள். அப்பா வீட்டிற்குள் வந்ததும் கடைக்கு போய் குடை வாங்கி வரச் சொன்னார்கள். அப்பா துரையையும் கடைக்கு வரும்படி சொன்னதும் ரொம்ப சந்தோஷமாக கிளம்பினான். உங்களுக்கு shopping போக ரொம்ப பிடிக்குமல்லவா? அப்பா நேராக குடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிக்கு அருகே அழைத்து சென்றார். துரை வேகமாக போய் கலரான design உள்ள style ஆன குட்டி குடையை எடுத்துக்கொண்டு வந்தான். ஆனால் அப்பா strong ஆன நல்ல கருப்பு கலர் பெரிய குடையை எடுத்துக்கொண்டு வந்து bill போட்டாங்க. தாத்தா குடை என்று friends எல்லாம் கேலி பண்ணுவாங்களேன்னு துரைக்கு வருத்தமாக இருந்தது. ஒரு நாள் டியூசனுக்கு போக கிளம்பிக் கொண்டிருந்தபோது, அம்மா குடையை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னார்கள். அந்த பெரிய குடையை எடுத்து செல்ல விருப்பமே இல்லை. ஆனாலும் அம்மா சொன்னதற்காக எடுத்துச் சென்றான். டியூசன் முடியவும் காற்றும், மழையும் வர ஆரம்பித்தது. Friends வைத்திருந்த style-லான குடையெல்லாம் பறக்க ஆரம்பித்தது. சிலரது குடை மடங்கிவிட்டது. துரையின் பெரிய குடை strong ஆக இருந்தது. Friends எல்லாரும் துரையின் பெரிய குடைக்குள் சென்று நனையாமல் வீடு வந்து சேர்ந்தார்கள். துரைக்கு மிகுந்த சந்தோஷம். அப்பாவிடம் சென்று, “எனக்குப் பிடித்த style ஆன குடை வாங்கித் தந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்; ஆனால் பிரயோஜனமாய் இருந்திருக்காது. நீங்க என்ன செய்தாலும் என் நன்மைக்குத்தான் என்பதை தெரிந்து கொண்டேன்” என்று அப்பாவை முத்தமிட்டான். 

 

அன்பு தம்பி-தங்கச்சி இயேசப்பாவும் நமக்கு எதை செய்தாலும் அது நன்மைக்காகத்தான் இருக்கும். உங்க பார்வைக்கு அது சரியில்லாததைப்போல் இருக்கலாம். ஆனால் அதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும். நன்மைகளை செய்யும் ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கணும். Ok வா. 

- A. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet