Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-11-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 21-11-2021 (Kids Special)

 

நிம்மியின் பதில் 

 

“தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.” -1 கொரிந்தியர் 3:17 

 

இனிய தென்றல் வீசும் மாலை நேரத்தில் பறவைகளின் அழகான சத்தத்தோடு சிறுவர்களின் இனிமையான பாடல் சத்தமும் கேட்டது. ஆமாம் அங்கு ஞாயிறு பள்ளி நடந்து கொண்டிருந்தது. எப்சிபா அக்கா ஆரம்ப ஜெபம் செய்துவிட்டு புதிதாக பாடல், கதை வசனமெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. Action Song பாடி பிள்ளைகள் எல்லாரும் அசத்திட்டாங்க. நீங்களும் super -ரா Action பண்ணுவீங்களா? very good. போன வாரம் சொல்லிக் கொடுத்த மனப்பாட வசனம் யாருக்கெல்லாம் தெரியும் என்று கேள்வி கேட்டாங்க எப்சி அக்கா. நிறைய பேர் எழுந்து நின்று மனப்பாட வசனத்தை சொன்னாங்க. சொன்ன எல்லாருக்கும் பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. என்ன குட்டீஸ் நீங்களும் வசனம் சொல்லி பரிசு வாங்குவீங்கதானே! Super. 

 

அடுத்ததா எப்சிபா அக்கா நம் தேவன் பெரியவரா? சிறியவரா? என்று கேட்டாங்க. எல்லாரும் பெரியவர் என்று உடனே பதில் சொன்னாங்க. நிம்மி மட்டும் எழுந்து நின்றாள். என்ன நிம்மி சொல்கிறாய் என்று கேட்டதும், இயேசப்பா என் சின்ன இதயத்திற்குள்ள இருக்கிறாரே அப்போ தேவன் சிறியவர்தானே! என்று நிம்மி சொன்னதும், எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். அக்கா நிம்மியை பாராட்டி பரிசு கொடுத்தாங்க. நிம்மி ரொம்ப சந்தோஷப்பட்டாள். நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி தேவன் பெரிய காரியங்களை செய்கிறதினால் அவர் பெரியவர்தான். ஆனால் நிம்மி சொன்ன மாதிரி சின்ன இதயத்தில் தேவன் வந்து தங்கி, நம்மோடு வாசம் செய்யும்படி தன்னை மாற்றிக் கொள்கிறார். நாம் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். நீங்களும் உங்க உள்ளத்தில் இயேசப்பாவுக்கு இடம் கொடுப்பீங்களா? Jesus மட்டும் உள்ளத்தில் வந்து விட்டால் உங்க வாழ்க்கையை super ராக மாற்றிவிடுவார். உண்மையான சந்தோஷம் உங்க உள்ளத்தில் பொங்கி வழியும். இயேசப்பா என் உள்ளத்தில் வாங்கன்னு ஆசையா கூப்பிட்டா உடனே வந்து விடுவார். நிம்மி உள்ளத்தில் இயேசப்பா இருந்ததால்தான் அவள் தைரியமா பதில் சொன்னாள். நீங்க சொல்ல முடியுமா? இல்லையென்றால் இன்றைக்கே கூப்பிடுங்க. இயேசப்பா உங்க உள்ளத்தில் வந்தாலே போதும் பிறகென்ன? Happyயான life தான். என்ன குட்டீஸ்! Jesus-க்கு உங்க உள்ளத்தில் இடம் கொடுக்க ரெடிதானே. super…super…super! 

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al jojobet giriş jojobet casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice