Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-11-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 17-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 17-11-2021

 

செல்வந்தன் 

 

“...உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.” – சங்கீதம் 119:77 

 

தகவல் புரட்சியின் மாமனிதராக போற்றப்படுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் இவ்வுலகின் செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை உண்டாக்கியவர். இவர் கம்ப்யூட்டர், செல்போன் போன்ற பொருட்களை புதிய தொழில் நுட்பத்தில் சிறந்தவைகளாக மாற்றினார். ஆரம்பத்தில் ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் போகப் போக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நிறுவனமாக உருவெடுத்தது. தன் புதிய கண்டுபிடிப்புகளால் உலகின் புகழ்பெற்ற பணக்காரராக ஸ்டீவ் மாறினார். இவரின் சொத்து மதிப்பு ரஷ்ய பங்குச் சந்தையை விட அதிகமாம். இப்படி பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தனது மரணத் தருவாயில் அவருக்குக் கிடைத்த பெயர், புகழ், பணம் எல்லாம் அர்த்தமற்றதாய் தோன்றியது. மரணத்தருவாயில் அவர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? பணத்தையும், புகழையும் தேடி உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு மற்றவர்களையும் நேசியுங்கள் என்று சொல்லி மரணத்தை தழுவினார். 

 

இராஜாவாகிய சாலொமோனைப் போல பூமியில் வசதியாக வாழ்ந்தவர்கள் இருக்கவே முடியாது. அவருக்குப் பணம், பதவி, ஞானம், உச்சிதமான உணவுகள், நிலங்கள், அரண்மனைகள், மனைவிகள், பாடகர்கள், வேலைக்காரர்கள் என சந்தோஷத்தை எதுவெல்லாம் தரமுடியும் என்று ஆராய்ந்து அவைகளை சலித்துப் போகுமளவும் அனுபவித்தார். இத்தனை சந்தோஷங்களைப் பார்த்தாலும் அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள், மாயை மாயை எல்லாம் மாயை! ஆனாலும் அவர் சந்தோஷம் எங்கேயென்று கண்டுபிடித்தார், அது தினமும் ஒரு மனுஷன் தன் கையால் வேலை செய்து மகிழ்ச்சியோடு சாப்பிடுவதற்கு கூட தேவனுடைய அநுக்கிரகம் தேவை என்பதை உணர்ந்தார். 

 

பிரியமானவர்களே! இன்று நாம் உதாரணமாக கண்ட ஸ்டீவ், சாலொமோன் ஆகிய இருவரும் பணமும், புகழும், ஞானமும் படைத்தவர்கள். ஆனால் அவர்களோ இவைகளில் தங்களுக்கு மகிழ்ச்சியே இல்லை என்றார்கள். நீங்களும் இவைகளைத் தேடி சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் பெறலாமென்று நினைக்கிறீர்களோ? இவைகள் எல்லாம் சில நாள் பூத்து பின்பு உதிர்ந்து போகும் பூவுக்கு சமமாயிருக்கிறது. ஆனால் என்றைக்கும் சலிக்காத மகிழ்ச்சியும் அழியாத சந்தோஷமும் தேவ சமுகத்தில் நேரம் செலவிட்டு அவருடைய வேதத்தைப் படித்து அவருடைய பாதையில் நடப்பதில்தான் உள்ளது. முயற்சித்து பாருங்களேன். 

- Bro. மருதுபாண்டியன் 

 

ஜெபக்குறிப்பு:

சிறுவர் இல்ல பிள்ளைகளின் படிப்பிற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al