Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09-11-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 09-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 09-11-2021

 

உப்பு 

 

“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;…” – மத்தேயு 5:13 

 

அன்று இராஜாவுக்கு பிறந்த நாள். அரண்மனை அலங்கரிக்கப்பட்டது, பலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பல புலவர்கள் மன்னரை வாழ்த்தி பரிசுகளைப் பெற்று சென்றனர். மதிய வேளையில் உணவருந்த வந்த மன்னர் தனக்கு உணவு சமைத்து பரிமாறும் ஊழியர்களிடம், “நீங்கள் என்னை எவ்வாறு நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே ஒருவர், “தங்கத்தைப்போல்” என்றார். மற்றொருவர், “நீங்கள் வைரக்கல் போன்றவர்” என்றார். ஒரு வயதான ஊழியரோ, “மன்னரே நீங்கள் உப்புக்கல் போன்றவர்?” என்றார். மன்னர், “என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டவுடன் “ஆம், நீங்கள் எல்லோருக்கும் பயனுள்ளவர், சுவையுள்ளவர், சுத்தமானவர்” என்று பதிலளித்தார். மன்னர் மகிழ்ந்து பரிசளித்தார். 

 

இயேசு கிறிஸ்துவும் இந்த பூமியில் உலாவிய நாட்களில் தன்னை பின்பற்றிய ஜனங்களைப் பார்த்து, “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்றார். அதுபோல ஒரு வாலிபன் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேட்டபோது, கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும் என கூறியதோடு, உனக்குள்ளதை விற்று தரித்திரருக்குக் கொடு என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவன் ஆதலால் அவன் ஆஸ்தியை, இல்லாத மற்றவருடன் பகிர்ந்து பயனுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்று கூறினார். உப்பும் தன் சுவையை தன்னுடன் இணையும் பொருட்களிடம் பகிர்ந்து சுவையுள்ளதாக்கிவிடுகிறது. ஆகவே “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என பழமொழி கூறுவர். மற்றவர்கள் உங்களை பயமின்றி, கலக்கமின்றி அணுகும்படி நாம் சமாதானமுள்ளவர்களாக, மற்றவர்களுக்கு நம்மிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். 

 

ஆம், பிரியமானவர்களே! நீங்களும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டுமா? உப்பாக மாறுங்கள்! எல்லாரும் அணுகக் கூடியவர்களாக, எல்லோருக்கும் பயனுள்ளவர்களாக மாறுவோம். பிறருடைய வாழ்வை சுவையுள்ளதாய் மாற்றுவோம். நம்மிடம் உள்ள அன்பை, சந்தோஷத்தை, தாலந்துகளை, பொருட்களை நம்முடன் உள்ளவர்களிடம் பகிர்ந்து பயனுள்ள வாழ்வு வாழ்வோம். God Bless You. 

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:

நம்முடன் இணைந்து ஊழியம் செய்யும் தோழமை ஊழியர்களின் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.   

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz jojobet jojobet giriş jojobet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel bahsegel bahsegel perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş belugabahis matbet romabet alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet