By Village Missionary Movement
Sunday, 07-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 07-11-2021 (Kids Special)
சுண்டு விரல்
“...பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.” – 1கொரிந்தியர் 12:22
அன்பு குட்டி செல்லங்களே! நீங்க Bible Story, Animals Story எல்லாம் கேட்டிருப்பீங்க. உங்க கையில் இருக்கும் விரல்கள் பேசிக்கொண்ட கதை கேட்டிருக்கீங்களா? இல்லைதானே! இன்றைக்கு விரல்கள் என்ன பேசினது என்று கதையைக் கேட்கலாமா?
ஒரு கையில் எத்தனை விரல்கள் இருக்கு. ஐந்து விரல்கள். Very good. ஒவ்வொரு விரலுக்கும் ஒரு பெயர் இருக்கு தெரியுமா? தெரியாதா, Ok நான் சொல்றேன் கேளுங்க. பெருவிரல், “என்னை பாருங்க கட்டையா இருந்தாலும், எவ்வளவு Strong ஆக இருக்கிறேன். நான் இல்லாம ஒரு டம்ளரைக்கூட உங்களால தூக்க முடியாதுன்னு” சொன்னதாம். ஆமான்னு எல்லா விரல்களும் ஒத்துக்கிட்டதாம். அடுத்து ஆட்காட்டி விரல், “நான்தான் எல்லாருக்கும் வழிகாட்டுகிறேன். இவர்தான், அங்கேதான் என்று அடையாளம் காட்டுகிறேன். அப்போ நான் எவ்வளவு முக்கியம்” என்றதாம். மூன்றாவது விரல் நம்ம என்ன சொல்றதுன்னு யோசித்தது. தன்னோட உருவத்தை பார்த்து, “விரல்களில் நான்தான் உயரமா தடியா இருக்கிறேன். நான்தான் பெரிய ஆளு” ன்னு சொன்னதாம். நான்காவது விரலுக்கு டக்குன்னு ஞாபகம் வந்தது என்னன்னு தெரியுமா? “திருமணம்னா எனக்குத்தான் மோதிரம் போடுவாங்க. தங்கம், வெள்ளி, வைரம் எல்லாவற்றையும் என் விரல்ல தானே போடுறாங்க”ன்னு சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதாம்.
கடைசியில இருக்கிற சுண்டு விரலுக்கு என்ன சொல்லனே தெரியலையாம். இயேசப்பா எனக்கு சொல்ல எதுவுமே இல்லையே என்று கவலைப்பட்டதாம். எல்லாரும் அவரவர் திறமையை சொல்லிட்டாங்கன்னு நினைக்கும்போது, இயேசப்பா பேசினாங்களாம், “கை கூப்பி ஜெபிக்கும்போது நீதான் என் பக்கத்தில் இருக்கிறாய்” என்று இயேசப்பா சொன்னதும் சந்தோஷப்பட்டதாம். “ஆமா நீங்க சொன்னது சரிதான் உலக வேலைகளை செய்ய நீங்க எல்லாரும் பயன்படுறீங்க. ஜெபிக்கும்போது ஆண்டவர் பக்கத்துல நான்தான் இருக்கிறேன் ஜெபித்தால்தானே எல்லா காரியமும் நடக்கும் என்று சுண்டுவிரல் சொன்னதாம். ஆமா, சுண்டு விரல் சொல்றது உண்மைதானே என்று எல்லா விரல்களும் ஆமோதித்ததாம்.
செல்ல குட்டிகளே! விரல்கள் பேசிக் கொண்டதை கேட்டீங்கள்ல. சுண்டு விரலைப்போல, எனக்கு திறமைன்னு சொல்ல ஒன்றுமே இல்லையே! வசதி இல்லை, படிப்பு இல்லை குடும்ப பின்னணி இல்லைன்னு நினைக்கலாம். ஆனா நீங்க உள்ளம் உடைஞ்சி ஜெபிக்கும்போது, இயேசப்பா உங்க பக்கத்துல வந்திடுவாங்க. ஒன்றுக்குமே உதவாக்கரைன்னு உங்களை சொன்னாலும் இயேசப்பா பக்கத்தில் நீங்க இருக்கும்போது, little star-ராக உங்களை மாற்றிவிடுவார். என்ன குட்டீஸ் சந்தோஷம்தானே!
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250