Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-11-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 03-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 03-11-2021

 

தபால் போடு 

 

“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.” - சங்கீதம் 65:2

 

கருத்தான ஜெபம் என்பது தபால் பெட்டியில் கடிதத்தை போட்டு விட்டு, பின்பு அதைப் பற்றி கவலையற்றிருப்பதைப் போன்றது. ஆனால் letter-ஐ கையில் வைத்துக்கொண்டு, “இதற்குப் பதில் வராவிட்டால் என்ன செய்ய?” என்று சந்தேகப்பட்டால் எதையாவது பெற்றுக் கொள்ள முடியுமா? அவைகளை நம் கையை விட்டு அனுப்பி தபால் இலாகாவையும், தபால்காரரையும் நம்பினால் அன்றி அவை ஒன்றையும் சாதிக்கமாட்டாது. 

 

வேதத்திலே நம்மைப் போல பாடுள்ள மனிதன் எலியா என்பவர், கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து வந்த ஆகாப் ராஜாவிடம் “என் வாக்கின்படி அன்றி பூமியின் மேல் மழை பெய்வதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன்” என்றார். அப்படியே ஆயிற்று. அந்த காலங்களுக்குப் பின்பு, எலியாபும், ஆகாப் ராஜாவும் கர்மேல் பர்வதத்தில் இருந்தனர். எலியா, ஆகாப் ராஜாவிடம் “பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது” என்றார். எலியா பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் முழங்காலில் பட குனிந்து ஜெபிக்கிறார். பின் தன் ஊழியக்காரனைப் பார்த்து, “நீ போய் கடல் பக்கமாய் பார்” என்றார். அவன் திரும்பி வந்து வெகு சுருக்கமாய் “ஒன்றும் இல்லை” என்றான். “நீ இன்னும் ஏழு தரம் போய்ப் பார்” என்றார். ஏழாந்தரம் ஊழியக்காரன் “இதோ, கடலில் இருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது” என்றான். ஒரு மனிதன் கருத்தாய், ஜெபம் பண்ணினான். சற்று நேரத்தில் மழை பொழிந்தது. 

 

கர்த்தருக்குப் பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனையான நேரங்களில் குழப்பமான சூழ்நிலையில் நம் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கை வைத்து ஜெபிக்கும்போது, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ஒரு கடிதத்தை நம்பிக்கையுடன் தபால் பெட்டியில் போடும்போது மாத்திரமே உரிய நபரை சென்றடைந்து பதிலை பெற்றுக் கொள்வதுபோல நாம் ஜெபிக்கும்போது மட்டுமே கர்த்தர் நமக்காக செயல்படுவார். நாமும் ஜெயத்தைப் பெற்றுக் கொள்வோம். சூழ்நிலைகளைப் பார்த்து சோர்ந்து போகாதேயுங்கள். ஜீவனுள்ள தேவன் கட்டாயம் நம் ஜெபத்திற்கும் பதில் அளிப்பார். ஆமென்!

- P. பியூலா 

 

ஜெபக்குறிப்பு:

சபைகள் திறந்து ஆராதனை நடைபெற உதவி செய்த தேவனை துதிப்போம்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al