Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02-11-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 02-Nov-2021

இன்றைய தியானம்(Tamil) 02-11-2021

 

முயற்சி திருவினையாக்கும் 

 

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” – பிலிப்பியர் 4:13 

 

பிறக்கும்போது 1200 கிராமுக்கும் குறைவாக பிறந்தவர் தான் லிசி. இவருக்கு எடை கூடாதபடி லியோ ஹேட்டல் பிடாஜ் ராய்டு சிண்ரோம் வியாதி இருந்தது. இவருக்கு வலது கண் தெரியாது. மேலும் பல பெலவீனங்கள், பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால் பலரும் கேலி செய்தனர். லிசி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து கடவுள் என்னை ஏன் படைத்தார் என அழுவார். 17 வயதில் you tube-ல் உலகிலேயே அசிங்கமான பெண் என்ற பெயரில் வந்த ஒரு வீடியோவில் இவரது photo வந்தது. அந்த வீடியோவை 40 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்திருந்தனர். பல தவறான விமர்சனங்கள் வந்தன. இதனால் சோர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்தார். பின் நான் ஏன் என்னைக் குறைவாக எண்ணி குறுகிய வட்டத்திற்குள் வாழ வேண்டும் என நினைத்து you tube channel ஆரம்பித்து “How do you define yourself” என்ற தலைப்பில் பேசிய motivation speech-க்கு 54 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தனர். இன்றும் பல இடங்களில் motivation speech கொடுத்துக் கொண்டு வருகிறார். 

 

மோசே வேறு தேசத்தில் தன் மாமா வீட்டில் தனியாக ஆடுகளை மேய்க்கிறவனாக வனாந்தரத்தில் அலையும் போது தேவன் எரிகிற முட்செடி நடுவில் தோன்றி எகிப்தில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டுவர நீ போ, நான் உன்னோடு இருக்கிறேன் என்றார். ஆனால் மோசேயோ நான் எம்மாத்திரம்? என்கிறார். என்னை நம்பார்கள், நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற வேறு யாரையாகிலும் அனுப்பும் என்றான். ஏனெனில் அவன் இப்படியே ஆடுகளை மேய்த்து தன் மனைவி பிள்ளைகளுடன் வாழலாம் என தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு இதிலே வாழ எண்ணினான். ஆனாலும் தேவன் மோசேயை விடவில்லை. பின் மோசே ஒத்துக்கொண்டான், பெரிய தலைவனாக மாறினான். 

 

இதனை வாசிக்கும் அன்பரே! நீங்களும் நான் இப்படி இருக்க வேண்டும், இந்த கல்லூரியில்தான் படிக்க வேண்டும், இவ்வளவு மதிப்பெண்கள் வர வேண்டும் அப்படியானால் தான் நான் நன்றாக வாழ முடியும். இது இல்லாத வாழ்வு வாழ்வா? என எண்ணி குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போது, அதற்கு மாறாக சூழ்நிலைகள் மாறும்போது துவண்டு போகிறோம். மாறாக தேவனுடைய பெரிய திட்டத்தில் நம் வாழ்வை ஒப்புக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். லிசி அழுதாலும் எழுந்து இன்றும் அநேகரை உற்சாகப்படுத்தும் பேச்சாளராக அநேகரின் வாழ்வில் நல்ல எண்ணங்களை தூண்டுபவராக உள்ளார். அது போல நீங்களும் அழுங்கள், ஆனாலும் துவண்டு விடாமல் மோசே தேவ திட்டத்தை ஏற்றுக்கொண்டதைப் போல் நீங்களும் தேவன் உங்களுக்கென்று தந்த மதிப்பெண், கல்லூரி இவற்றை ஏற்றுக் கொண்டு வாழும் போது உங்கள் வாழ்வும் ஆசீர்வாதமாய் அமையும். வாழ்வில் துவண்டு அமராமல் எழுந்து முன்னோக்கி செல்வதே வெற்றி.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:

பள்ளிகளுக்கு செல்லும் மிஷனெரிகளின் பிள்ளைகளுக்கு தேவன் பாதுகாப்பைக் கட்டளையிட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al