Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27-10-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 26-Oct-2021

இன்றைய தியானம்(Tamil) 27-10-2021

 

முழுமையான பரிசோதனை 

 

"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்." - நீதிமொழிகள் 4:23 

 

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனையை செய்வது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்பொழுதுதான் நமது உடலில் உள்ள அவயவங்களின் செயல் விகிதங்களை அறிந்து கவனமாய் ஆரோக்கியமாய் வாழமுடியும் என்கின்றனர். அதேபோல் பரி.வேதாகமமும் நமது ஆவிக்குரிய வாழ்வில் ஒவ்வொருவரும் இருதயத்தை பரிசோதித்து கவனமாய் காத்துக்கொள்ள நம்மை அறிவுறுத்துகிறது. அப்பொழுதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வும் சுகமானதாக இருக்கும். 

 

47 வயதான ஆஸ்திரியா மனிதர் ஒருவர் தனது திரண்ட செல்வமும், ஆடம்பர செலவுகளும் உண்மையான வாழ்வின் மகிழ்ச்சியை காண தடையாயிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார். தனது 4.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களையும் பிறருக்கென்று அர்ப்பணித்துவிட்டார். கார்ல்யரபேடர் எனப்பட்ட இவர் லண்டனின் தினசரி பத்திரிக்கைக்கு, "நான் எனக்கு தேவையற்ற, விரும்பாத பொருட்களுக்கு அடிமைப்பட்டு வேலை செய்வது போன்ற ஒரு உணர்வை அனுபவித்தேன். எனது சுகபோக வாழ்க்கை முறை எவ்வளவு பயங்கரமானது என்பதையும், ஆத்மீக உணர்வற்றது என்பதையும் உணர்ந்தபோது மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தேன்" என்று பேட்டி கொடுத்தார். அவருடைய செல்வம் இப்பொழுது லத்தீன் அமெரிக்காவில் உள்ள எளியவர்களுக்கு உதவுகின்றது. 

 

"ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்" என சங்கீதத்தில் (62:10) வாசிக்கின்றோம். "உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத்.6:21) என்று இயேசுவானவர் தம் மலைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டார். கிறிஸ்தவ வாழ்வில் நம் சந்தோஷத்தை கெடுப்பதில் பண ஆசை, பொருளாசை போன்றவைகள் பிரதான பங்கு வகிக்கின்றது. இப்படிப்பட்ட ஆசைகள் நம்மிடம் உள்ளதா என்பதை வேத வசன துணையுடன் நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பொருளாசையினால் சுகபோகமாய் வாழ்ந்து, அதினால் தேவனுடைய இராஜ்யத்தை இழந்து போனவர்களைப் பற்றி பரி. வேதாகமம் அநேகரை நம் கண்முன் நிறுத்தி நம்மை எச்சரிக்கின்றது. ஆகவே கவனமுடன் நம் இருதயத்தை வேத வசனத்திற்குள்ளாக வைத்து காத்துக் கொள்வோம். 

- P. ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு: 

சுவிசேஷ ஊழியத்தில் அர்ப்பணிக்கப்பட்ட பகுதிநேர ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அநேகர் பங்குபெற ஜெபியுங்கள்.   

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al