Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-10-2021
Share:

By Village Missionary Movement

Friday, 22-Oct-2021

இன்றைய தியானம்(Tamil) 23-10-2021

 

எச்சரிப்பின் செய்தி 

 

“தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.” - நீதி. 27:8 

 

2008-2012 ஆம் ஆண்டுவரை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் =சாந்த். இவருடைய பந்து வீசும் திறமை இந்திய அணிக்கு பெரிய பலமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு IPL கிரிக்கெட் போட்டியில் Match Fixing (மேட்ச் ஃபிக்ஸிங்) என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று இவர் மேல் புகார் வந்தது. அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவுடன் இவர் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அப்போதிலிருந்து இப்போதுவரை நேரம் போக்கும் ஷோக்களில் நடிப்பது, சில திரைப்படங்களில் நடிப்பது, அரசியலில் ஈடுபடுவது என்று அலைந்து கொண்டிருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருக்க வேண்டியவர் தனது ஸ்தானத்தை விட்டுவிட்டு காணப்படுகிறார். இது நமக்கு ஒரு எச்சரிக்கை பாடம்! 

 

வேதத்தில் 1சாமு.2:22-36 வரை தியானித்துப் பார்த்தால் ஒரு காரியம் நடக்கிறது. அது என்னவென்றால், ஆசாரியனாயிருந்த ஏலி தன் ஸ்தானத்தை இழக்க ஆரம்பிக்கிறார். அனுபவமுள்ள ஆசாரியனாயிருந்தாலும் தன் பிள்ளைகளை ஒழுங்காக நடத்த முடியவில்லை. ஆவிக்குரிய அனுபவம் இல்லை, கர்த்தருடைய சத்தத்தையும், சித்தத்தையும் அறிய முடியவில்லை. ஏதோ ஆலயத்தில் ஆசாரியனாக பெயருக்கு இருக்கிறோம் என்கிற நிலைமை. அப்போது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து ஏலியை எச்சரிக்கிறார். ஏலியின் ஸ்தானம் முடிவுக்கு வருகிறது. தேவன் ஏலியை தள்ளிவிட தீர்மானித்தார். இது துக்ககரமான காரியம். வேறொரு ஆசாரியனை தேவன் ஏற்படுத்த சித்தங்கொள்கிறார். ஏலியின் நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள். கூட்டை விட்டு அலைகிற ஒரு குருவியைப் போன்ற நிலைமை. 

 

அன்பானவர்களே! இந்த கொரோனா நாட்களில் காணப்படும் சூழ்நிலையைப் பார்த்து அநேக ஊழியர்கள் தங்கள் ஸ்தானத்தை விட்டுவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதம் சொல்லுகிற இந்த சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும். கூட்டை விட்டு அலைகிற குருவிக்கு பாதுகாப்பே கிடையாது! அதைப்போலத்தான் தன் ஸ்தானத்தை விட்டு அலைகிற மனுஷனும்! நீங்கள் வேலையோ, தொழிலோ செய்யும் இடத்தில் உங்கள் ஸ்தானத்திலிருந்து உங்களை விழத்தள்ள சூதாட்டம், லஞ்சம், பாவம், திருப்தியில்லாத உணர்வு போன்றவை வரலாம். ஜாக்கிரதையோடு இருங்கள்! உங்கள் ஸ்தானத்தை விட்டுவிடாதீர்கள்! 

- T. சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

இன்னும் அநேகர் இராக்லாண்டு பைபிள் காலேஜில் வந்து சேர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al