Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-10-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 21-Oct-2021

இன்றைய தியானம்(Tamil) 21-10-2021

 

நீதிக்”கடிகள்” 

 

“அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.” – நீதிமொழிகள் 29:1

 

பிரியமானவர்களே! இன்றைய நம்முடைய தியானத்தில் கடிந்து கொள்ளுதலைக் குறித்து நீதிமொழிகளில் சொல்லப்பட்டவைகளில் சில படிப்பினைகளை பார்ப்போம். 

 

பரியாசக்காரனைக் -கடிந்து கொள்ளாதே: (நீதி. 9:8) 

பரியாசக்காரர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் முற்றிலும் சரியென்று வாதிட்டு மற்றவர்களின் கடிந்துகொள்ளுதலையும் ஆலோசனைகளையும் அசட்டை செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை கடிந்து கொள்ளும் நமக்குத்தான் பகையும், அவமானமும் நேரிடும். எனவே இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவோம். 

 

ஞானமுள்ளவனைக் -கடிந்து கொள்: (நீதி. 9:8)

ஞானமுள்ளவர்கள் மற்றவர்கள் மூலம் தங்களுக்கு வரும் கடிந்து கொள்ளுதலை மற்றும் ஆலோசனையை கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டு தவறான செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் தப்பிக் கொள்வார்கள். 

தாவீது அபிகாயிலின் ஞானமான கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு இரத்தம் சிந்தாமல் திரும்பினான் அல்லவா? 

 

இருதய கடினப்படுவோரின் நிலை:

“அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்” (நீதி.29:1) என்று எழுதப்பட்டுள்ளபடி, நம்மில் சிலர் ஆண்டவர் தினந்தோறும் நம்மிடம் பேசியும் இருதயத்தைக் கடினப்படுத்துகிறோமல்லவா! ஏலியின் குமாரரைப் போலும், சவுலைப் போலும் நாமும் அழிந்து போகாமல் பிழைத்துக் கொள்ள இருதயத்தை ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்துவோமா? ஆண்டவருடைய ஆவியை பெற்றுக் கொண்டு அவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு திரும்புங்கள். (நீதி.1:22, 23) 

 

நம்மில் யாரேனும் பேதைகளாகவும், நிந்தனைக்காரராகவும், மதியீனராகவும் இருப்போமென்றால் நீதிமொழிகள் 1- ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் அழைப்பை ஏற்று அவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு திரும்புவோம், அப்பொழுது அவர் தமது ஆவியை நமக்கு அருளுவார், நம்முடைய பாதையும், வாழ்வும் சமாதானமாயிருக்கும்.

- K. பெஞ்சமின் 

 

ஜெபக்குறிப்பு:

இராக்லாண்டு பைபிள் காலேஜ் பயிலும் மாணவர்கள் கடைசிக் கால எழுப்புதலின் ஆயுதங்களாக மாற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet