By Village Missionary Movement
Sunday, 17-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 17-10-2021 (Kids Special)
ஓய்வு கொடு
“நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.” -நீதிமொழிகள் 23:2
ஹாய் குட்டீஸ், சந்தோஷமா இருக்கிறீங்களா? நீங்க சந்தோஷமா இருக்க என்ன காரணம் தெரியுமா? உங்க உடலில் இருக்கிற ஒவ்வொரு parts-ம் சரியா செயல்படுகிறதினால்தான் உங்களால் happy யா இருக்க முடிகின்றது. தலைவலி இருந்தால் உங்களால் happy யா இருக்க முடியாது. அப்படித்தானே! அப்போ Jesus daily நமக்கு சுகத்தை தந்து, அருமையா நம்மை பாதுகாக்குறாங்க. அதுக்கு நன்றி சொல்லணுமா? வேண்டாமா? கண்டிப்பா Jesus க்கு நன்றி சொல்லணும். மறக்கவே கூடாது. Ok.
ஒரு வீட்டில் ஒரு வயதான பாட்டியம்மா இருந்தாங்க. அவர்களுக்கு உதவி செய்யும்படி ஒரு அழகான சிறுமி ரமணி அமர்த்தப்பட்டாள். ஒரு நாள் காலையிலே வேகமா வீடு பெருக்கி, பாத்திரம் கழுவிவிட்டு விளையாடச் செல்ல நினைத்தாள். அந்த வேலை முடிந்தவுடன் பாட்டியம்மா ரமணியை சமையலுக்கு காய் நறுக்கிக் கொடு என்று சொன்னாங்க. “சரியம்மா” என்று அந்த வேலையையும் செய்து முடித்துவிட்டாள். மறுபடியும் அந்த பாட்டி கொஞ்சம் துணி துவைத்துக் கொடு என்று சொன்னாங்களா, ரமணியின் பிஞ்சு கைகள் வலித்தது. ஆனாலும் சிரமப்பட்டு துவைத்துக் கொடுத்தாள். இனி விளையாட முடியாது, ரொம்ப களைப்பாகி விட்டதே! தூங்கத்தான் போக வேண்டும் என்று நினைக்கும்போதே மோர் எடுத்துக் கொண்டு வந்து, இதனை கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும் என்று பாட்டியம்மா சொன்னார்கள்.
ரமணிக்கு கோபம் வருதோ இல்லையோ நமக்கு பாட்டியம்மா மேல் கோபமா வருதில்லையா? அவங்கள தண்டிக்கணும் போல் இருக்கிறதல்லவா? அந்த பாட்டியம்மா போலத்தான் நம்ம ஒவ்வொருத்தரும் இருக்கிறோம். இரைப்பை நாம் சாப்பிட்ட உணவை ஜீரணிக்க செய்யும் வேலையை முடிக்கும் முன்னமே, அடுத்த உணவைக் கொடுத்து விடுகிறோம் . சாப்பாடு சாப்பிட்ட உடனேயே cool drinks, அடுத்து உடனேயே snacks, அடுத்து Tea இப்படி அடுத்தடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உடம்பு குண்டாகி, healthy யா இருக்க முடியாது. நாம சாப்பிட்ட உணவை ஜீரணிக்க செய்யும் வேலையை முடித்துவிட்டு, இளைப்பாறலாம் என்று நினைக்கும் போது மறுபடியும் ஏதாவது உணவை உண்டு, மிருதுவான (இரைப்பைக்கு) உறுப்பிற்கு வேலை கொடுக்கிறோம். ஜீரண உறுப்புகள் ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டேயிருந்தால் என்னவாகும்? யோசித்துப் பாருங்கள்.
அருமையான தம்பி-தங்கச்சி! அளவோடு உண்டால் வளமோடு வாழலாம். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று பழமொழி சொல்வாங்க. இதனால் இன்றிலிருந்து இயேசப்பா நமக்கு தந்திருக்கும் அருமையான சரீரத்தை அழகாக வைத்திருக்க தீர்மானம் எடுப்போமா?
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் மாத இதழ் அச்சடிப்பதற்கான பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250