Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-10-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 14-Oct-2021

இன்றைய தியானம்(Tamil) 14-10-2021

 

ஓரங்கட்டு

 

“என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.” - நீதிமொழிகள் 1:23

 

சமீபத்தில் நான் கேள்விப்பட்ட சம்பவம் என் இருதயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிராமத்திலுள்ள குடும்பத்தில் 3 பிள்ளைகள் இருந்தனர். இரண்டு பெண்பிள்ளைகள், ஒரு மகன். தகப்பனில்லாத அவர்களை ஆசிரியரான அத்தாய் மிகவும் சிரத்தையுடன் கவனித்து வந்தார். சமுதாயத்தில் நல்ல முன்மாதிரியுள்ள குடும்பமாய் அக்குடும்பம் இருந்தது. இந்த சூழ்நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் மகன் ஒரு பிள்ளையை விரும்பினான். அவனுக்குள் தவறான எண்ணமும் வளர்ந்தது. ஒரு நாள் அது வெறியாக மாறி தன் ஆசை நிறைவேறாததால் அவளை கொன்றுபோட்டான். முடிவு சிறைக் கைதியானான். அவமானத்தால் உடன் பிறந்த இரு சகோதரிகளும் தற்கொலை செய்துகொண்டனர். தாய் புத்தி சுயாதீனமில்லாமலாகிவிட்டார். சிறையில் அவனைச் சந்தித்த நிருபர்களிடம், “என் தவறினால் என் குடும்பமே அழிந்துவிட்டதே” என்று கூறி கண்ணீர் விட்டான். இறுதியில் அவனும் தற்கொலை செய்துகொண்டான்.

 

இதை வாசிக்கிற உங்களிடத்தில் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகத்திலே பாவம் எது? பரிசுத்தம் எது? என்று அநேகருக்கு தெரிவதில்லை. அதனால் தான் அநேகர் குடியிலும், விபசாரம் என்கிற பாவத்திலும் வேசித்தனத்திலும் விழுந்து விடுகிறார்கள். சிறு வயதிலேயே சினிமா, சோசியல் மீடியாக்களை பார்க்கிறார்கள். அதிலே காண்கின்ற காரியங்களை பாவம் என்று அறியாதபடி தங்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் பாவம் செய்து பாவத்தினால் மரணம் வரைக்கும் சென்றுவிடுகிறார்கள். இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லா பாவங்களையும் தன்னுடைய இரத்தத்தினாலே கழுவி நம்மை பரிசுத்தப்படுத்தி பரலோகத்திற்கு அழைத்துப் போகும் படியாக சிலுவையிலே இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறது மாத்திரமல்ல, பரத்திற்கு ஏறுவதற்கு முன்பதாக நான் போய் உங்களுக்கு ஒரு தேற்றரவாளனை அனுப்புகிறேன். அந்த தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் வந்து எது பாவம் எது பரிசுத்தம் என்று நமக்கு கூடவே இருந்து நம்மை நடத்தும்படியாக அதாவது பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 

 

நாம் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறது மாத்திரமல்ல நமக்கு பரிசுத்த ஆவியை தந்தருளுவார். அவர் நம்மை பரிசுத்த வழியிலே நடத்தும்படி எது பாவம் எது பரிசுத்தம் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பார். அதாவது நாம் நமது இலக்கை அடைய பரிசுத்தத்தை விரும்பி, பாவத்தை ஓரங்கட்ட வேண்டும். அதன்படி நாம் நடக்கும்போது பரிசுத்தமாய் நாம் வாழ முடியும். நாம் இயேசு கிறிஸ்துவின் உறவில் நிலைத்திருக்கும் போது நம்மோடு அந்த பரிசுத்த ஆவியானவர் இருந்து நம்மை ஆசீர்வதிப்பார். இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக் கொள்வோமா? 

- P.V. வில்லியம்ஸ்      

 

ஜெபக்குறிப்பு: 

சத்தீஸ்கரில் இருந்து வந்து நம்முடன் பயிற்சியில் இருக்கும் ஊழியர்கள் நல்ல ஆவிக்குரிய தலைவர்களாக எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet