Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-10-2021
Share:

By Village Missionary Movement

Monday, 11-Oct-2021

இன்றைய தியானம்(Tamil) 11-10-2021

 

முடிவை மனதில் வை 

 

“மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” – நீதிமொழிகள் 14:12

 

ஒரு விவசாயி தன் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ஒரு அருவியைப் பார்த்தார். அருவியின் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் காணப்பட்ட தேன்கூடு அவர் கண்களில் பட்டது. உடனே அவர் மரத்தின் மேல் ஏறி அதனை எடுக்க முயன்றார். அப்போது வழிப்போக்கர் ஒருவர் அவரை, “உயிர் வேண்டுமானால் இறங்கி விடு கிளை ஒடிந்து விழப் போகிறது” என்றார். ஆனால் விவசாயியோ காதில் போடாமல் ஏறி தேனை பெற எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தார். தேன்கூட்டை அவர் எடுத்துக் கொண்டு இறங்கும்போது கிளை ஒடிந்து ஆற்றில் விழுந்தார். ஆற்றில் அவருக்கு காத்திருந்த முதலை தேனோடு அவரை பிடித்துக் கொண்டது. அந்தோ! மரணம்! 

 

வேதத்திலும் சவுல் ராஜாவிடம் சாமுவேல் தீர்க்கதரிசி, “நீ அமலேக்கியரை முற்றிலும் அழித்துப் போடு என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றார். சவுல் அமலேக்கியருடன் போர் புரிந்து அமலேக்கின் ராஜா, முதல்தரமான ஆடுமாடுகள், நலமானவைகள் எல்லாவற்றையும் உயிரோடு தப்ப வைத்தார். சவுலுக்கு முதல்தரமானவைகளை அழிக்காதது நலமாக தோன்றியது. ஆனால் கர்த்தரோ சவுல் தன் சுய விருப்பத்தின்படி செய்ததால் ராஜாவாக இராதபடி அவனைப் புறக்கணித்தார். சாமுவேல் சவுலிடம், “நீர் கர்த்தருடைய சொல்லைக் கேளாமல் கொள்ளையின் மேல் பறந்து கர்த்தர் வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே கர்த்தர் உம்மை இராஜாவாய் இராதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றார். சவுலின் முடிவு பரிதாபம்! ஏனெனில் கர்த்தர் சவுலை விட்டு விலகினார். 

 

கர்த்தருக்குப் பிரியமானவர்களே! நமக்கும் கூட சவுலைப்போல, ஒரு சில ஆசைகளினால் கர்த்தரின் வார்த்தையைப் புறக்கணித்து நமக்கு நலமான வழியில் செல்கிறோமா? பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றித் திரிகிறான். சிக்கினால் நித்திய அழிவு என்பதை மறந்துவிட வேண்டாம். ஆனால் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்தாலோ நித்திய ஜீவன் நமக்கு உண்டு. அவரிடத்தில் அடைக்கலம் புகுந்து அவருடைய சத்தம் கேட்டு அவர் வழியில் நடந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்! அல்லேலூயா!

- A. பியூலா 

 

ஜெபக்குறிப்பு:

7000 ஊழியர்கள் மூலம் 1 இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்படும் திட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் நம்முடன் இணைய ஜெபியுங்கள்.

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş