Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09-10-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 09-Oct-2021

இன்றைய தியானம்(Tamil) 09-10-2021

 

அடிச்சுவடுகள் 

 

“நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.” – நீதிமொழிகள் 20:7 

 

நியூயார்க் நகரில், மேக்ஸ் ஜீக்ஸ் என்பவர் கடவுள் பக்தியில்லாதவராக, துன்மார்க்க ஜீவியம் செய்தவராக இருந்தார். அவர் மணந்த பெண்ணும் கடவுள் பயம் இல்லாதவராக இருந்தார். இவர்களுடைய தலைமுறைகளில் 1200 பேரை வைத்து கணக்கு எடுக்கப்பட்டது. இதில் 310 பேர் ஏழ்மையான நிலையில் ஒரு வீடும் வேலையும் இல்லாமல் கஷ்டமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சிலர் தங்களது ஒழுக்கமில்லாத வாழ்க்கையினால் தங்கள் சரீரங்களில் வியாதிகளை வரவழைத்துக் கொண்டார்கள். இதில் சிலர் திருடர்களாகவும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களது இந்த நிலையினால் அரசாங்கத்துக்கு 15,00,000 டாலர்கள் விரயமானது. 

 

அதே நகரில் ஜோனத்தான் எட்வர்ட் குடும்பம் இருந்தது. அவர் தேவனுடைய மனிதனாக கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தவர். அவர் மணந்த பெண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த தலைமுறையில் 300 பேர் போதகர்களாகவும், சிலர் மிஷனெரிகளாகவும், சிலர் வேதாகம கல்லூரியில் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். சிலர் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்தனர். மேலும் இதில் ஒரு சிலர் முதல்வர்களாகவும், ஜனாதிபதியாகவும் இருந்தனர். இவர்களது குடும்பத்தில் அநேகர் நல்ல செல்வாக்கு மிக்கவர்களாகவும், நாட்டில் உயர்ந்த நிலையில் இருந்ததாக கணக்கெடுப்பு கூறுகிறது. 

 

பிரியமானவர்களே! நீங்கள் நீதிமானாயிருந்தால் உங்களுக்கு பின்வரும் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கும். இது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்துள்ளது. நீங்கள் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றிடலாம். அந்த ஆசீர்வாதங்கள் நமக்கும் நமது சந்ததியையும் சாரும். துன்மார்க்கனுடைய சந்ததி துன்மார்க்கமாக இருக்கும் என்பதற்கு மேலே கொடுக்கப்பட்டதான குடும்பமே சாட்சி. நம்முடைய வாழ்வும், நாம் பின் வைத்துபோகும் நமது அடிச்சுவடுகளும் நம்முடைய சந்ததிக்கு ஆசீர்வாதமா அல்லது சாபமா என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கையே உறுதிப்படுத்தும். ஆகவே கர்த்தருக்கென்று வாழ்வோம். விசுவாசமுள்ள சந்ததியை இந்த உலகத்திற்கு கொடுப்போம்! நாமும் நம் குடும்பமும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்! 

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

தோழமை ஊழியர்கள் பணித்தளங்களுக்கு செல்லும்போது தேவன் பாதுகாப்பைக் கட்டளையிட ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş