Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  06-10-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 06-Oct-2021

இன்றைய தியானம்(Tamil)  06-10-2021

 

Help....Needy

 

“நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.” – நீதிமொழிகள் 3:2

 

வாலிபன் ஒருவன் படிப்பிற்கேற்ற சரியான வேலையில் இல்லாமல், மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றதினால், கிராமத்தில் உள்ள பெற்றோருக்கு பணத்தையும் அனுப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.  எனக்கு விடிவுகாலம் வராதா என்று ஜெபித்து வந்ததுடன் தான் போகும் சபையில் சிறுசிறு ஊழியமும் செய்து வந்தான். ஒருநாள் அவன் முதலாளி தன் உறவினருக்கு உணவளிக்க, அரசு மருத்துவமனைக்கு இவனை அனுப்பினார். அது கொரோனா வார்டு என்பதால் மாஸ்க்கும், கையுறையும் அணிந்தவாறு இவன் செல்ல, எப்பக்கம் திரும்பினாலும் ஜனங்கள் இடமில்லாமல் வியாதியில் படுத்திருக்க, ஒவ்வொருவரின் கண்களிலும் ஒரு தேடல். யாராவது உதவமாட்டார்களா என்று! அங்கிருக்கிற பணியாளர்கள் பம்பரமாய் சுழன்றும் அனைவரையும் கவனிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். உறவினருக்கு உணவளித்துவிட்டு, தாகத்தால் தவித்தவர்களுக்கு தண்ணீரை மொண்டு கொடுத்து, அவர்களின் தேவையை அறிந்து உதவத் தொடங்கினான். தண்ணீரையும், உணவையும் பெற்றுக் கொண்டவர்கள் அவன் கையில் ஆயிரங்களை அள்ளித் திணித்தனர். அதுமட்டுமல்ல, “ஐயா, இந்த கொரோனா வார்டில் நாங்கள் இருக்கும் நாட்களில் தயவுசெய்து எங்களுக்கு உதவிசெய்ய முடியுமா?” என்று சொல்லவும் மறுக்க மனமில்லாமல் தன் உயிரை துச்சமென கருதி உதவி செய்ய ஆரம்பித்தான். இரண்டு மாதங்கள் உருண்டோடின. உயிர் பிழைத்தவர்கள் தாராளமாக பணத்தைக் கொடுத்து நன்றி செலுத்தினர்.  இரண்டு மாதத்திற்குள்ளாகவே இரண்டு லட்ச ரூபாய் அவன் கையில் கிடைத்தது. தன்னுடைய போதகரிடம் வந்து இதை சாட்சியாக சொன்னான்

 

தாவீது ராஜா வனாந்தரத்தில் இருக்கும்போது, ஆடுகளுக்கு மயிர் கத்திரிக்கிறவனாகிய நாபாலிடத்தில் தன் ஆட்களை அனுப்பி தனக்காகவும், தன் வேலைக்காரருக்காகவும் உதவிகளையும், உணவுகளையும் கேட்கும்போது நாபால் கோபப்பட்டு பேசி, எந்த உதவியும் செய்யாமல் திருப்பி அனுப்பி ராஜாவின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டான். இதை அறிந்த நாபாலின் மனைவி அபிகாயில் பசியுடன் இருந்த தாவீதுக்கும், அவர் வேலைக்காரர்களுக்கும் உணவுகளை ஆயத்தம்பண்ணி எதிர்கொண்டு போய்க் கொடுத்து ராஜாவின் தயவை பெற்றுக்கொண்டாள். பிறருக்கு நன்மை செய்யும்படி நமக்கு திராணி இருக்கும்போது நாம் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அபிகாயில் ஞானத்துடன் செயல்பட்டு  உதவிசெய்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டாள்

 

அநேக நேரங்களில் நாம் கஷ்டத்தில், வேதனையின் சூழ்நிலையில் நடக்கிற வேளையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது நம்மைக் குறித்ததான கவலையும், பாரமும் மட்டுமே நம்மை அழுத்தும். ஆனால் அப்படிப்பட்ட நிலைமையிலும் தன்னலம் நோக்காமல் பிறர் நலன் நோக்கி தன்னால் பிறருக்கு என்ன செய்ய முடியும் என்ற உணர்வுடன் நம்மால் இயன்றவரை உதவி செய்யும்போது தேவ அன்பை வெளிப்படுத்துகிறவர்களாகவும், தேவ நாமத்தை மகிமைப்படுத்துகிறவர்களாகவும் காணப்படுவோம்

- Mrs. வசந்தி ராஜமோகன்

 

ஜெபக்குறிப்

மீடியா ஊழியங்களில் பணியாற்றும் ஊழியர்களை தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.

Email: reachvmm@gmail.co

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorg

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movemen

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250ut)inmin.:*.பு: .. . 7 !!67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş