Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  03-01-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 03-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  03-01-2021 (Kids Special)

புதிய மாற்றம் 

“...இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்...” – வெளி. 21:5 

ஹலோ குட்டி செல்லங்களே! Happy new year இந்த புதிய வருடத்தை காண செய்த தேவனுக்கு நன்றி சொல்வோம். 2021 ஆம் ஆண்டிலே தேவன் புதிய காரியங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார். நீங்க வயதுக்கேற்றபடி வளர்ந்தால்தானே உங்க பெற்றோர் சந்தோஷப்படுவாங்க. அதுபோலத்தான் இயேசப்பாவும் அவரை பிரியப்படுத்துகின்ற காரியங்களில் வளர்ந்திருக்கிறோமா? புதிதாய் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று பார்ப்பார். இயேசப்பாவுக்கு பிடித்த காரியத்தில் நீ வளர்ந்திருக்கிறாயா? 

ஒரு வியாபாரி ஒருவர் தன் வியாபாரத்தை முடித்து விட்டு வரும் வழியில் பேருந்துநிலையத்திற்கு எதிரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றை பார்த்தார். சரி இந்த ஹோட்டல் பார்ப்பதற்கு பெரிதாய் இருக்கிறது. சாப்பாடும் Superரா ஆ இருக்கும் என்று நினைத்து உள்ளே போனார். எந்த வரவேற்பும் இல்லை டேபிள்களில் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. சாப்பாட்டில் சுத்தம் இல்லை. உணவை எடுத்து வாயில் வைத்தால் குமட்டிக் கொண்டு வந்தது. ஐயோ! பெரிய ஹோட்டல்னு சாப்பாடு நல்லா இருக்கும்னு நினைச்சது தப்பாயிருச்சே, எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வழியா சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினார். அந்த ஹோட்டல் நிர்வாகம் சரியில்லாததால் அதன் மதிப்பை இழந்து நின்றது. 

இரண்டு வருடங்கள் கழித்து அதே வியாபாரி அந்த ஹோட்டலைப் பார்த்தார். பிரம்மாண்டமாக அழகாய் காட்சியளித்தது. கார், பைக் அதிகம் நின்றது. கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. நிறைய பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். சரி உள்ளே போய் பார்க்கலாம் என்று நினைத்துப் போனார். எல்லாரும் ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடமெல்லாம் சுத்தமாய் இருந்தது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணமென்று சுற்றிலும் பார்த்தார். புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த ஹோட்டல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற வார்த்தை ஒரு Board இல் எழுதப்பட்டிருந்தது. ஒரு மனிதன் சரியாய் இருக்கும்போது எத்தனை பேர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பதை அந்த வியாபாரி அறிந்து கொண்டார். 

அன்பான தம்பி-தங்கச்சி, இந்த புதிய ஆண்டிலே நீர் என்னை வழிநடத்தும். உம்முடைய நிர்வாகத்தின் கீழ் நான் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன் என்று சொல்வாயானால், உன்னை அநேகருக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவார். உங்க வாழ்க்கையில் புதிய மாற்றத்தை இயேசப்பாவால் மட்டும்தான் உண்டாக்க முடியும். Amen சொல்றீங்களா? ஓ! Super. 
-    Mrs. ஜீவா விஜய்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet