Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-09-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 28-Sep-2021

இன்றைய தியானம்(Tamil) 28-09-2021

 

உருவாக்க விட்டுக்கொடு 

 

“நான் உன்னைத் தாயின் கருவில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;…” - எரேமியா 1:5

 

விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை இரண்டு முறை உழுதுகொண்டிருந்தார். இதைப் பார்த்த பட்டணத்துவாசியான ஒருவர், “நீங்கள்தான் ஏற்கனவே உழுது விட்டீர்களே பின்பு ஏன் இரண்டாம் முறையும் உழுது உங்கள் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்குகிறீர்கள்” என்றார். அதற்கு அந்த விவசாயி, “முதல் முறை உழும்போது மண்ணில் சில பகுதிகளில் இறுக்கமான தன்மை காணப்பட்டது. இதனால் நான் விதைக்கும் விதை தன்னுடைய முழுமையான பலனைத் தரமுடியாமல் போய்விடும். ஆனால் இரண்டாம் முறை உழுதபின்பு அதன் நிலைமாறி விதைக்கும் விதைகள் எளிதாக வேர்பற்றி முளைத்து சிறந்த பலனைத் தரமுடியும்” என்றார். 

 

கண்ணீரின் தீர்க்கதரிசி என்று நம்மால் அழைக்கப்படுகிற எரேமியாவை, தேவன் அவனைத் தாயின் வயிற்றில் உருவாகும்முன்னே அறிந்து பரிசுத்தப்படுத்தி ஜனங்களுக்கு அவரைத் தீர்க்கதரிசியாக உருவாக்கி அனுப்பினார். அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்போதே ராஜ்ஜியங்களை கட்டவும், நாட்டவும், இடிக்கவும், பிடுங்கவும் தேவன் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். தேசத்தின் ஜனங்களை பாவம் செய்யும்போதெல்லாம் இவன் எச்சரித்தான். ஆனால், யாருமே இவன் சொல்வதைக் கேட்கவேயில்லை. மாறாக, அவனைச் சித்திரவதை செய்து துன்பப்படுத்தினார்கள். இப்படி செய்ததால் அவன் ஜனங்கள் மீது வெறுப்பைக் காட்டாமல் அவர்களை தேவ கோபத்திலிருந்து விடுதலை செய்யும்படி கடைசிவரை போராடினான். அவர்களுக்காக கண்ணீர் விட்டு அழுது புலம்பினான். கடைசிவரை போராடினான். அவர்களுக்காக கண்ணீர் விட்டு அழுது புலம்பினான். கடைசிவரை அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைச் சொல்லி எச்சரித்தான். தேவன் விரும்பி எதிர்பார்க்கும் குணாதிசயம் இதுதான். 

 

அன்பு தேவப்பிள்ளையே, உன்னையும் தேவன் உருவாக்கும்போது சில கடினமான சூழ்நிலைக்குள் நடத்த வேண்டியதாயிருக்கும். இவைகள் எல்லாம் உன்னைக்கொண்டு தேசத்தில் மகிமையான காரியங்களை செய்யும்படிதான் என்பதை உணர்ந்துகொள். நீ திகைத்து நிற்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தாவே உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவதென்று உன்னை அர்ப்பணிக்கும் போது அந்த நிலத்தைப் போல நல்ல பலனை நம்மால் தரமுடியும். இன்னும் எரேமியாவைப் போல மற்றவர்களுக்காக அழுது ஜெபிக்கும் சிறந்த குணாதிசயம் நம்மில் உருவாகும். இதையெல்லாம் என்னால் சகிக்க முடியாது என்று சொல்வோமானால் நம்மால் தேவனுக்கு எந்தப் பிரயோஜனமுமில்லை. 

- K. மனோஜ்குமார் 

 

ஜெபக்குறிப்பு:

மீடியா மூலம் நடைபெறும் நமது ஊழியத்தின் மூலம் தேவன் அநேகரைத் தொட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al