Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27-09-2021
Share:

By Village Missionary Movement

Monday, 27-Sep-2021

இன்றைய தியானம்(Tamil) 27-09-2021

 

நம் வீட்டைப் புதுப்பிப்போம்

 

“…இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்...” – வெளி. 21:5

 

மிக மோசமான நிலையில் அந்த வீடு காணப்பட்டது. அந்த வீட்டைப் பார்த்து கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மிகவும் பரிதாபமாக அதை பார்ப்பார்கள். எவ்வளவு நல்ல வீடு, ஆனால் அதின் எஜமான் அதை பராமரிக்காமல் விட்டதால் இந்த அலங்கோலம் என்று புலம்புவார்கள். அந்த வீட்டை வேறொரு மனிதன் வாங்கினார். எல்லாரும் “இந்த வீட்டையா வாங்குகிறாய்?” என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் புது எஜமான் அந்த வீட்டை பழுது பார்க்க ஆரம்பித்தார். முன்பு இருந்ததை விட மிக மோசமாக வெளியே காணப்பட்டது. பார்ப்பவர்கள் புதிய எஜமானை பைத்தியம் போல பார்த்தார்கள். சில மாதங்கள் கழித்து அந்த வீட்டை கடந்து சென்றவர்கள் அந்த வீட்டை ரசிக்க ஆரம்பித்தார்கள். 

 

ஆம், அந்த பாழடைந்த மோசமான வீடு புது எஜமான் கையில் வந்தபோது அவர் அதை அநேகர் பார்த்து பிரமிக்கும் வண்ணமாக மாற்றிவிட்டார். இன்று இதை வாசிக்கும் என் அன்புக்குரியவர்களே உங்களையும் தேவன் அதிகமாய் நேசிக்கிறார். தேவசித்தம் இன்றி இதை நீங்கள் வாசிக்க முடியாது. தாவீது கோலியாத்திற்கு முன்பாக நிற்கும்போது நான் இங்கு வந்ததற்கு முகாந்தரம் இல்லையா? என்று கேட்டான். ஆம் இதை வாசிக்க உங்களுக்கும் ஒரு முகாந்தரம் உண்டு. நான் மோசமானவன்(ள்) இனி என்னையோ என்னுடைய வாழ்க்கையையோ சரிப்படுத்தவே முடியாது. என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏளனமாய் சிரிக்கிறார்கள். இவன் அவ்வளவுதான், இவன் வாழ்க்கை முடிந்ததென்று கூறுகிறார்கள் என கலங்கி கொண்டிருக்கிறீர்களா? இந்த வார்த்தை உங்களுக்குத்தான். உங்கள் சரீரமாகிய ஆலயத்தை நீங்கள் பராமரிக்காமல் விட்டபடியினால் உங்கள் வாழ்க்கை அலங்கோலமாய் இருக்கலாம். உங்கள் முயற்சியினால் சரிப்படுத்த முயன்று தோற்று கண்ணீர் வடிக்கலாம். கண்ணீர் வடிக்கும் உங்களைப் பார்த்து தேவன் சொல்கிறார், “உன் வாழ்வை என்னிடத்தில் கொடு நான் அதை புதுப்பிக்கிறேன்” என்று! இன்றே உங்கள் வாழ்வை அவர் கரத்தில் கொடுக்க ஆயத்தமா? 

 

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அற்புதநாதா உம்கரத்தில்

அனைத்தும் உமக்கே சொந்தம் என்று

என்னையே உம்மிடம் தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே அனைத்தும் அர்ப்பணமே

என் முழு தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே

 

அநேகர் பார்த்து பிரமிக்கும் வண்ணம் உங்கள் வாழ்வு மாறப்போவது அதிக நிச்சயம்! 

- Mrs. தவமணி வைரவேல்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al jojobet giriş jojobet casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice