Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-09-2021
Share:

By Village Missionary Movement

Friday, 24-Sep-2021

இன்றைய தியானம்(Tamil) 24-09-2021

 

உற்சாக மனது

 

“...அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி...” – 1நாளாகமம் 28:9

 

ஒருமுறை நாடெங்கும் தண்டோரா அடிக்கப்பட்டது. அதன் சாராம்சம் என்னவென்றால் நாட்டை ஆளும் அரசன் அவ்வூரின் பகுதியில் நகர்வலம் வருவதாகவும், அவரின் மனதை கவருபவர்களுக்கு பரிசளிப்பதாகவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. மக்களுக்கோ ஒரே மகிழ்ச்சி! எப்படியாவது அரசனின் மனதை கவர்ந்து பரிசை வாங்கிட வேண்டுமென மக்கள் தங்கள் நகர் முழுவதும் சுத்தம் செய்தனர். அவரவர் வீட்டை அழகுபடுத்தினர். இன்னும் சிலர் அழகான புத்தாடைகள் அணிந்தும் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்தும் சில பரிசுகளை வாங்கிக் கொண்டு ராஜா நகர் வலம் வரும் அந்த நாளில் நகரின் பிரதான வீதியில் வந்து நின்று கொண்டிருந்தனர். ஆனால் ஒரு ஏழையானவன் மட்டும் தன்னால் எதையும் செய்ய இயலாதவனாய், தன்னுடைய வீட்டு வேலைகளை உற்சாகமாய் செய்து கொண்டிருந்தான். ராஜாவோ அக்குறிப்பிட்ட நாளில் நகரின் வீதிகளில் வராமல் வேறுவழியாய் நகருக்குள் வந்து மக்களை காண விரும்பினார். ஒருவரையும் காணோமே என்று ஏமாற்றமடைந்தவராய் திரும்பிக் கொண்டிருந்தார், வரும் வழியில் ஒர் சிறிய வீட்டில் ஒருவன் உற்சாகமாய் வேலை செய்வதை பார்த்து மனம் மகிழ்ந்தவராய் கையில் கொண்டு வந்த விலையுர்ந்த பரிசுகளை ஏழையானவனுக்கு வழங்கி சென்றார். பின்னர் வேறு வழியாய் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

நம் வேதத்திலும் கூட 2 நாளா. 17:6ம் வசனத்திலே யோசபாத் என்ற ராஜாவை குறித்து வேதம் இப்படியாய் அடையாளப்படுத்துகிறது. “கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது.” கர்த்தர் யோசபாத்தோடிருந்தார், அவன் பாகால்களை தேடாமல் தன் தகப்பனுடைய தேவனை தேடி, அவருடைய வேத வசனத்தின்படி நடந்து கொண்டான். கர்த்தர் அவன் ராஜ்ஜியத்தை விஸ்தாரமாக்கி சகல ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதித்தார்.

 

ஆம்! தேவபிள்ளைகளே இதனை படிக்கும்போது என் மனம் பிரமிப்படைந்தது. கர்த்தருடைய வழியில் நடக்க உங்கள் மனம் உற்சாகம் கொண்டதா? உற்சாகமாக தன்னுடைய வேலையில் ஈடுபட்டு பரிசைப் பெற்றுக்கொண்ட அந்த ஏழையானவனை போல் நாமும் கர்த்தருடைய வழியில் உற்சாகமாக நடந்து யோசபாத்தைப் போல் ஆசீர்வாதங்களை பெற்றுக்கோள்வோம்.

- Mrs. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு:

நம்முடைய New Life Home -ல் இருக்கும் பிள்ளைகளின் கல்லூரி கட்டணத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş nakitbahis nakitbahis giriş marsbahis jojobet superbetin matbet jojobet Egebet Egebet giriş Egebet Güncel Giriş