By Village Missionary Movement
Saturday, 04-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 04-09-2021
குருஜியிடம் கற்றுக்கொள்வோம்
“....என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்....” – மத்தேயு 11:29
ஆசிரியர் ஒருவர் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களையெல்லாம் தனது மாணவர்கள் படக்கூடாது என்று நினைத்தார். எனவே தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு பாடங்களை நேர்த்தியாகக் கற்றுக்கொடுத்தார். தனது மாணவர்களுக்காக அநேகக் காரியங்களைத் தியாகம் செய்தார். மாணவர்கள் அவரிடத்தில் விடாமுயற்சி, கடின உழைப்பு, தியாகம் என அனைத்தையும் கற்றுக்கொண்டனர். வாழ்வில் சிறந்தவர்களாகக் காணப்பட்டனர். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு திசையில் ஜொலிக்கத் தொடங்கினர். அவர்களது வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறியது.
பரிசுத்த வேதாகமத்தில் நாம் பார்த்தோமானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு சிறந்த குருஜியாக இருந்தார். அவர் தனது 3 ½ ஆண்டுகால பூமிக்குரிய வாழ்வில் சீஷர்களை உருவாக்கினார், அவர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தார், வேதத்தை ஆராய கற்றுக் கொடுத்தார், ஊழியம் செய்யக் கற்றுக்கொடுத்தார், பொறுமையாயிருக்கக் கற்றுக்கொடுத்தார், தாழ்மையாயிருக்கக் கற்றுக் கொடுத்தார். இப்படி இயேசுகிறிஸ்து தனது சீஷர்களுக்கு மட்டுமல்லாமல் ஜீவத்தண்ணீர் தருகிறவர் நான்தான் என்று சமாரியப் பெண்ணுக்கும் (யோவான் 4ம் அதிகாரம்), மறுபடி பிறக்கும் அனுபவத்தைப் பற்றி நிக்கொதேமுவுக்கும் (யோவான் 3ம் அதிகாரம்) கற்றுக்கொடுத்தார். இயேசுவினிடத்தில் கற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஜொலித்தார்கள்.
நண்பர்களே! நமக்கு ஆசிரியர் என்பவர் மிகவும் முக்கியமானவர்! இந்த பூமியில் நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ இயேசுவினிடத்தில் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்! அவர் நமக்கு வாழ்வின் தத்துவங்களை, வழிமுறைகளை வேதத்தின் மூலமாக கற்றுத் தருவார். புதிய ஏற்பாட்டில் மத்தேயு 5, 6, 7 ஆகிய அதிகாரங்களை வாசித்து, அதின் மூலம் இன்றைக்கு அநேக தலைவர்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள்! தங்கள் வாழ்க்கையில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள். இயேசு குருஜியிடம் கற்றுக்கொள்வோம்! நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வோம்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஆங்கிலத்தில் தினதியான செய்தியை மொழிபெயர்க்கும் ஹெட்சி அம்மாவிற்கு கண் ஆபரேசன் நடைபெற்றது. விரைவில் குணமடைய தொடர்ந்து மொழிபெயர்ப்பில் உதவிபுரிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250