Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-08-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 26-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 26-08-2021

 

பழக்கமில்லாத மாடும், பழக்கமான கவணும் 

 

“நான் எப்பிராயீமைக் கைப்பிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும், நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.” – ஓசியா 11:3 

 

அன்று ஒரு விசேஷித்த நாள். ஒவ்வொரு காரியங்களும் மிக அழகாய் நேர்த்தியாய் திட்டம் பண்ணப்பட்டது. ஒன்று இரண்டல்ல, கிட்டத்தட்ட 30,000 பேர் தெரிந்தெடுக்கப்பட்டனர். சகலவித கீதவாக்கியங்கள், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம், ஆடல்பாடல் என எல்லாமே ரெடியானது. புத்தம் புதிய ரதம் கூட ஆயத்தமாகிற்று. இப்போது கொஞ்சம் புரிந்திருக்குமே, ஆம், தாவீது உடன்படிக்கை பெட்டியை யூதாவிலிருந்து கொண்டு வரும்போது செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது! நாகோனின் களத்தினருகே வந்தபோது மாடுகள் மிரண்டதும் தடுமாறிய உடன்படிக்கைப் பெட்டியை ஊசா பிடித்ததினிமித்தம் தேவன் அவரை அடித்தார். அவன் செத்துப் போனான். இப்போது நமக்குள் ஒரு சந்தேகம் வரலாம், பழகிய மாடுகள் மிரளுமா? ஒரு வேளை அவைகள் பழக்கப்பட்டவைகளாய் இருந்திருந்தால் மிரள வாய்ப்பில்லை. புது ரதம் என்று கூட சொல்லப்பட்டிருப்பதால், மாடுகளும் புதிதாயிருக்கலாம். பழக்கமான வண்டியும் மாடுகளும் இருந்திருந்தால் ஒரு வேளை ஊசாவின் மரணம் கூட நிகழ்ந்திருக்காது. 

 

இன்னொரு சம்பவம் தாவீது, கோலியாத். சவுல் தாவீதுக்கு தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு தலைச் சீராவை அவன் தலையின் மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்கு தரிப்பித்தான். அவனுடைய பட்டயத்தை தாவீது கட்டிக்கொண்டான். ஆனால் அதிலே அவனுக்கு பழக்கமில்லாததினால் அவைகளை களைந்து விட்டு அவன் தனக்கு பழக்கமான கவணை எடுத்துக்கொண்டு 5 கூழாங்கல்லை தெரிந்தெடுத்து, மேய்ப்பனுக்குரிய அடைப்பத்தில் போட்டு கவணை எடுத்துக்கொண்டு பெலிஸ்தியன் அண்டைக்கு போனான். ஜெயத்தை பெற்றுக் கொண்டான். 

 

இன்றும் தேவன் நம்மிடம் நீதியின் வசனத்தில் பழக்கமுடையவர்களாய் இருக்க வேண்டும் (எபி. 5:13) என விரும்புகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் குழந்தைகளாய் அல்ல தேறினவர்களாய் இருக்க வேண்டும் என்பதே. தாவீதின் காரியத்தில் எப்படி அவன் தனக்கு பழக்கமான ஒரு விஷயத்தை தேவனுக்கென்று பயன்படுத்தினானோ அப்படியே நாமும் நம்முடைய அனுபவங்களை தேவனுக்கென்றும் தேவநாம மகிமைக்கென்றும் பயன்படுத்துவோம்! அவ்விதம் பயன்படுத்தும்போது தேவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார். 

- R. மஞ்சுளா 

 

ஜெபக்குறிப்பு:

தோழமை ஊழியர்களின் பாதுகாப்புக்காக மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet