Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-08-2021
Share:

By Village Missionary Movement

Monday, 23-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 23-08-2021

 

சாக்கு போக்கு

 

“தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.” - நீதி. 18:9 

 

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் திருடப் போனவனை தோட்டக்காரன் பார்த்துவிட்டார். ஏன் தென்னை மரத்தில் ஏறினாய் என்று கேட்டார். புல் பிடுங்குவதற்கு ஏறினேன் என்றானாம். தென்னை மரத்தில் எப்படியடா புல் இருக்கும் என்று கேட்ட தோட்டக்காரரிடம், புல் இல்லை அதனால் தான் இறங்கிக் கொண்டிருக்கிறேன் என்றானாம் திருடன். எதையாகிலும் சொல்லி தப்பிக்க முயற்சிக்கிறவர்கள் அநேகர். வகுப்பிற்கு பிந்திவந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர், “ஏன் லேட்” என்று கேட்டார். “கொஞ்சம் பிந்துவிட்டது” என்றானாம். “ஏண்டா பிந்திவிட்டது” என்ற ஆசிரியரிடம் “கொஞ்சம் லேட்டாகிவிட்டது சார்” என்றானாம். இது வாசிப்பதற்கு சிரிப்பாக இருந்தாலும், நாமும் அநேக நேரங்களில் சாக்குப்போக்கு சொல்லி நம் வேலைகளுக்கு காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம்மை நம்பி ஒரு வேலை, ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டு அதைச் சரியாகச் செய்து முடிக்காத போது சாக்குப்போக்கு சொல்லி, தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறோம். சாக்குப்போக்கு ஏன் சொல்லுகிறோம்?

 

1. உண்மையில் அந்த வேலையில் ஆர்வமில்லை.

2. செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் மற்ற வேலையில் அதிக நேரம் செலவு செய்துவிடுதல்.

3. முழுமூச்சுடன் அந்த வேலையில் ஈடுபடவில்லை.

4. கேட்டால் ஏதாவது சொல்லிக்கொள்ளலாம் என்ற எண்ணம்.

 

இது போன்ற காரணங்களால் வேலையைச் செய்து முடிக்காதபோது வேலை கொடுத்தவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துபோகிறோம். மறுபடியும் அந்த நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. வேதத்தில், “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்” (ஆதி. 6:22) நோவாவின் பணி நிறைவால் குடும்பத்தினர், அநேக உயிர்கள் காப்பாற்றப்பட்டன. 

 

நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைய அதன் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்பட தேவன் விரும்புகிறார். நன்மைகளும் ஆசீர்வாதங்களும் தானாய் வந்துவிடுவதில்லை. சாக்குப்போக்குச் சொல்லாமல் காரியங்களை நிறைவேற்றும்போது நாம் உயர்வடைவோம், மேன்மையாய் வாழ்வோம், அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம். அல்லேலூயா. 

- Mr. அழகர்சாமி

 

ஜெபக்குறிப்பு:

மோட்சப் பயணம் தின தியான இதழை அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking