Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  23-11-2020 (Romans Special)
Share:

By Village Missionary Movement

Monday, 23-Nov-2020

யார் தேவபுத்திரர்? 

“மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” – ரோமர் 8:14

வேதத்திலே தேவ ஆவியினால் நடத்தப்பட்ட தேவமனிதர்கள் ஒரு சிலரின் வாழ்விலிருந்து நம்முடைய வாழ்வை இந்த நாட்களில் சீர்தூக்கிப்பார்போம். 

    தேவ ஆவியினால் நடத்தப்பட்ட யோசேப்பு தீமைக்குத் தீமை செய்யாமல், தீமை செய்த சகோதரர்களுக்கும் நன்மை செய்தான். நாம், நமக்குத் தீமை செய்தவர்களை எப்படி பார்க்கிறோம்?

    தேவ ஆவியினால் நடத்தப்பட்ட தானியேல் தீட்டானதை தொடக்கூடாது என்று தனக்குள் தீர்மானம் பண்ணினான். தேவனுக்கு பிரியமற்றதை பார்ப்பதையும், செய்வதையும் குறித்து நம்முடைய மனநிலை எப்படி இருக்கிறது?

    தேவ ஆவியினால் நடத்தப்பட்ட தாவீதிற்கு சவுலைக் கொல்ல அநேக வாய்ப்புகள் கிடைத்தும் தேவனால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட சவுலின் மேல் கை போட துணியவில்லை. தேவ ஊழியர்களைக் குறித்து துணிகரமாய் பேசுவதில் இப்படிப்பட்ட மனநிலை நமக்கு உண்டா?

    தேவ ஆவியினால் நடத்தப்பட்ட ஸ்தேவான் தன்னை கல்லெறிந்து கொல்ல வெறியுடன் நிற்பவர்களையும் மன்னிக்கும்படி ஜெபிக்கிறார். நாம் நம் உடன்பிறந்தோர், அண்டை அயலகத்தார் அறியாமல் செய்யும் காரியங்களை தேவன் மன்னிக்கும்படி மன்றாடுகிறோமா?

    தேவ ஆவியினால் நடத்தப்பட்ட யோவான்ஸ்நானன் யாருக்கும், எதற்கும் ஏன் மரணத்திற்கும் அஞ்சாமல் பாவத்தை கண்டித்துரைத்தார். நாம் சுவிசேஷம் அறிவிக்க பயந்த சூழ்நிலை உண்டா? 

    தேவ ஆவியினால் நடத்தப்பட்ட பவுல் சுவிசேஷத்தினிமித்தம் வந்த பாடுகள் அனைத்தையும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார். கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் வரும் நிந்தனைகளை நாம் சகிக்கிறோமா அல்லது சங்கடப்படுகிறோமா? 

மேற்கண்ட கேள்விகள் மூலம் தேவன் நம்மோடு இடைபடுகிறார். பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன் என கூறும் நாம், அன்றாட வாழ்விலே தேவனுடைய ஆவியினால் நடத்தப்படும் அனுபவமுண்டா? அல்லது இன்னும் கசப்பு, பொறாமை, சண்டைகள், இச்சைகள் இப்படிப்பட்ட காரியங்களுக்கு நம் இருதயத்தில் இடமுண்டா? சத்துருக்களை சிநேகித்து, பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ணி பிதாவின் பிள்ளைகளாயிருப்போம்.
-    U. சாமுவேல் 

ஜெபக்குறிப்பு:
ஆந்திரா, ஒடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் ஊழியம் செய்யும் நமது மிஷனெரிகளின் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking