Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-08-2021
Share:

By Village Missionary Movement

Monday, 16-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 16-08-2021

 

கழுகுக்கு சமானமாய் 

 

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;…” – ஏசாயா 40:31 

 

பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிக சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவை இனம் இவைகள் தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும். ஆனால் அந்த 70 வயதை எட்ட அவை சில மிகக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியதாயிருக்கும். கழுகு தனது 40 வயதினை எட்டும்போது அவைகளின் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச் செல்ல முடியாது. அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக் கடினமான வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி இறகுகளைப் பிடுங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது இறகுகள் வரக் காத்திருக்கும். 

 

பரிசுத்த வேதாகமத்தில், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என எழுதப்பட்டுள்ளது. இந்த கழுகுகளைப் போல நாமும் செட்டைகளை அடிக்க வேண்டும் என்றால் காத்திருக்க வேண்டும். கழுகுகளைப் போல நாமும் வாழப் பழக வேண்டும். 

 

இதை வாசிக்கின்ற தேவ பிள்ளைகளே! சில சமயங்களில் மாற்றங்கள் நமக்கு அவசியம். பல சமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இன்றைய நாட்களில் நாம் பார்ப்போமானால், நாம் உயிர்வாழ மிகக் கட்டாயமான மாற்றம் Mask! எனவே நம்முடைய பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கை என பலவற்றை விட்டொழிக்க வேண்டியுள்ளது. அதோடு மாதக்கணக்காக வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் இந்த நாட்கள் கழுகுகளைப் போல நம்மை புதுப்பிக்கும் நாட்களாய், கர்த்தருக்கு காத்திருக்கும் நாட்களாய் மாறட்டும். அப்போது கழுகுக்குச் சமானமாய் உயர பறக்கவும், உலகத்தை ஜெயிக்கவும் முடியும்.

- T. சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

ஒரு கிராமத்தை ரூ. 2000/- கொடுத்து தத்தெடுக்கும் குடும்பங்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş