Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15-08-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 15-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 15-08-2021 (Kids Special)

 

விடுதலை! விடுதலை! 

 

“...குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” - யோவான் 8:36 

 

ஹலோ குட்டீஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இன்றைக்கு என்ன நாள்? Yes, இன்னைக்கு நம்ம இந்திய தேசத்தின் சுதந்திர நாள். ஒவ்வொரு வருஷமும் இந்த நாளில் நாம ஸ்கூலுக்கு போய் Flag hosting, march past பண்ணினோம், ஸ்வீட், சாக்லேட் எல்லாம் ஷேர் பண்ணிட்டு இருந்தோம். ஆனா, கடந்த 2 வருஷமா ஸ்கூல்போக முடியல, அப்படித்தானே.  

 

75 வருஷத்துக்கு முன்னாடி நம்ம Freedom fighters போராடி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நம்ம தேசத்தை விடுதலையாக்கினாங்க. இயேசப்பா கூட நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கினாங்க. இந்த நாட்கள்ல நிறைய பேர் Video games, Social Media வுக்கும் அடிமையாகிட்டீங்களா? கவலைப்படாதீங்க, இயேசப்பா நிச்சயமாய் அதிலிருந்து விடுதலையாக்குவாங்க. பைபிள் சொல்கிறது, குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று. இதுமட்டுமில்ல, இந்த நாட்கள்ல ரொம்ப கோபப்படுறீங்களா? யாரையாவது பார்த்தா பொறாமையா இருக்கா. நிச்சயமா இயேசப்பா இதிலிருந்துகூட விடுதலையாக்குவாங்க. எப்படி விடுதலையாக்குவாங்கன்னு கேட்கிறீங்களா? எப்போ இயேசப்பாகிட்ட போய் மன்னிப்பு கேட்டு Prayer பண்றோமோ அப்ப நிச்சயமா இயேசப்பா விடுதலையாக்குவாங்க. நம்ம இயேசப்பா கிட்ட பெற்ற விடுதலையை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்களும் விடுதலை பெறும்படி ஜெபிக்கணும். இது மட்டும் இல்ல நாம் பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, யாரையும் ஏமாத்தக் கூடாது, சண்டை போடக்கூடாது, அம்மா அப்பாவுக்கு கீழ்ப்படிந்து நடக்கணும். School ல Teacher கொடுக்கிற Home works எல்லாம் கரெக்டா பண்ணனும். யாராவது ஏதாவது வேலை கொடுத்தா பொறுப்பா செஞ்சு கொடுக்கணும். Daily தவறாம Prayer பண்ணனும் பைபிள் படிக்கணும். இப்படியெல்லாம் பண்ணினா இயேசப்பாவுக்கு பிரியமா வாழ முடியும் இயேசப்பாவுக்கு பிரியமா வாழ்ந்தா இயேசப்பா உங்க குடும்பத்த ஆசீர்வதிப்பாங்க. தேசத்தில நீங்க இருக்கிற இடத்தில உங்களை ஆசீர்வாதமா வைப்பாங்க. Ok. 

 

அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய ஜான் F. கென்னடி அவர்கள் இப்படியாக சொல்றாங்க, “உங்கள் நாடு உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள், உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்னு கேளுங்கள்” என்று. நாம நம்ம தேசத்துக்காக என்ன செய்ய முடியும்னு கேட்கிறீங்களா? நாம நம்ம தேசத்துல இருக்கிற ஜனங்களுக்காக ஜெபம் பண்ணலாம். நம்மை மாதிரி சின்ன பசங்களுக்காக, கஷ்டத்துல இருக்கிற ஜனங்களுக்காக prayer பண்ணலாம். முடிஞ்சா அவங்களுக்கு help பண்ணலாம். முக்கியமா நாம எல்லாரும் நம்ம தேசத்தின் எழுப்புதலுக்காக prayer பண்ணனும். Prayer மட்டும் பண்ணினா போதுமா? நிச்சயமா இல்ல, நம்மோட படிக்கிறவங்களுக்கு, விளையாடுறவங்களுக்கு, இயேசப்பாவை பற்றி சொல்லணும். Ok, குட்டீஸ் எல்லோருக்கும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்கள். 

- திவ்யா A. பீபா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş