Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-08-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 14-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 14-08-2021

 

நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்

 

“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;…” – யோவான் 15:16 

 

தமஸ்குவுக்கு செல்லும் வழியிலே தேவன் பவுலுக்கு தரிசனமானபோது, பவுல் தேவனிடம், “நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” என்று கேட்டார். தேவன் அனனியா மூலம் தன் சித்தத்தை தெரிவித்தார். இதிலிருந்து நாம் ஒரு காரியத்தை அறிந்து கொள்ளலாம். தேவன் தம்முடைய சித்தத்தை நம் மூலம் நிறைவேற்றுவதற்காகத்தான் நம்மைத் தெரிந்து கொள்கிறார் என்று அறிகிறோம். இப்படி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற தேவன் தெரிந்துகொண்டவர்கள் பின்வரும் அனுபவங்களைக் கடக்க வேண்டியது வரும். 

 

1.பாடுகள், வேதனைகள், அவமானங்கள்: பஞ்சகாலத்தில் இஸ்ரவேலரை வெகு ஜனங்களோடு காப்பாற்றும் தேவசித்தத்தை நிறைவேற்ற தெரிந்துகொள்ளப்பட்ட யோசேப்பிற்கு சகோதரர் மூலம், போத்திபார் மனைவி மூலம் வந்த அவமானங்கள், பாடுகள் ஏராளம்! இயேசுவை இந்த உலகிற்கு மனுஷகுமாரனாக அனுப்புவதற்கு தெரிந்துகொள்ளப்பட்ட மரியாள் சந்தித்த நிந்தனைகளும் அனேகம்! 

 

2. அடங்கியிருக்க வேண்டிய நிலைமை: யூத ஜனங்களை அழிவினின்று தப்புவிக்கத் தெரிந்துகொள்ளப்பட்ட எஸ்தர், ஓர் அரசியாக இருந்தாலும் வளர்ப்புத் தந்தையான மொர்தெகாய்க்கு அடங்கியிருக்க வேண்டிய நிலைமை இருந்தது. 

 

3. தியாகம் செய்யவேண்டிய நிலைமை: புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேலருக்கும் சுவிசேஷம் அறிவிக்கத் தெரிந்துகொள்ளப்பட்ட பவுல், அவருடைய அந்தஸ்து, செல்வாக்கு, சுகவாழ்வு எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. 

 

பிரியமானவர்களே! மேற்கண்ட அனுபவங்கள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஒரு சிறப்பான நோக்கத்திற்காக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையாக, விசுவாசத்தோடு, உற்சாகமாய் ஓடி, தேவன் உங்களை தெரிந்துகொண்ட நோக்கத்தை நிறைவேற்றுங்கள். 

- Mrs. கீதா ரிச்சர்ட் 

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாலிபர்களுக்கென சிறப்பு முகாம்களை நடத்த தேவன் கிருபை செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet