Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-08-2021
Share:

By Village Missionary Movement

Friday, 13-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 13-08-2021

 

எல்லா வேலையும் உன்னத வேலையே 

 

“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…” – பிரசங்கி 9:10 

 

போதகர் ஒரு குடும்பத்தினரைச் சந்திக்கப் போயிருந்தபோது ஓர் வாலிபனை சந்தித்தார். “தம்பி என்ன வேலை செய்கின்றீர்கள்?” என்று கேட்டார். “நான் ஒரு எஞ்சினியர், அநேக இடங்களுக்கு வேலைக்காக விண்ணப்பித்து உள்ளேன். ஆனாலும் வேலை கிடைக்கும்வரை வீடு கட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய காண்டிராக்டருக்கு உதவியாக வேலை செய்கிறேன். சம்பளம் மிகவும் குறைவுதான். என்னைப் படிக்க வைத்த பெற்றோருக்கு நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன்” என்றான். அவனது பதிலில் மகிழ்ச்சியடைந்த போதகர், அவனை உற்சாகப்படுத்தி, ஆசீர்வதித்து ஜெபித்து சென்றார். சில மாதங்களிலேயே அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. 

 

செருப்பு தயாரிக்கும் வேலையை செய்து கொண்டிருந்த வில்லியம் கேரி மிஷனெரியாக இந்தியாவிற்கு வந்து, அநேக இந்திய மொழிகளில் பைபிள் வெளிவரக் காரணமாயிருந்தார். இந்திய இலக்கியங்கள் அனேகமானவற்றை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து சிறப்பான ஊழியத்தைச் செய்து முடித்தார். நாம் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதை நாம் உண்மையாய் செய்யும்போது, தேவன் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தி நம்மை பிறருக்கு ஆசீர்வாதமாய் வைப்பது உறுதி!

 

வேதத்தில் யோசேப்பு எகிப்திற்கு கொண்டுபோகப்பட்டான். அடிமையான யோசேப்பு தனக்கு ஒப்புவிக்கப்பட்ட அனைத்துக் காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடித்தார். கர்த்தர் யோசேப்போடு கூட இருந்தார். அவன் காரிய சித்தியுள்ளவனானான். அநேக பிரயாசத்திற்குப் பின்பு அதிபதியாக உயர்த்தப்பட்டான். 

 

இதை வாசிக்கின்ற சகோதரனே, சகோதரியே! என் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையென்று சோர்ந்து போயிருக்கிறீர்களா? கிடைத்த வேலையை செய்வோம். உழைக்க ஆயத்தமாயிருந்தால் எங்கும் வேலை செய்யலாம், செய்ய முடியும். ஒரு வேலையும் செய்யாமலிருப்பதே தரம் குறைந்த நிலை என்பதை உணர வேண்டும். கீழ்த்தரமான வேலை என்பது தேவனுக்குப் பிரியமில்லாத திருடுவது, கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது போன்றவையே! நேர்மையான முறையில் செய்யும் எந்த வேலையும் மேன்மையானதே. நகருகின்ற காரைத் திருப்ப முடியும், நிற்கிற காரைத் திருப்ப முடியாது. யோசேப்பை போல கொடுக்கப்பட்ட வேலைகளில் சிறப்பாகச் செயல்படும்போது கர்த்தர் கூட இருந்து நம்மை உயர்த்துவது நிச்சயம்! 

- L. அழகர்சாமி 

 

ஜெபக்குறிப்பு:

கெத்செமனே வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கட்டிடப் பணிகளுக்கான தேவைகள் சந்திக்கப்பட, விரைவில் கட்டி முடிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet jojobet holiganbet bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş