Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-08-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 12-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 12-08-2021

 

சிந்தை 

 

“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.” – சங்கீதம் 41:1

 

“C.M.S ன் அம்மா” என்றழைக்கப்படும் “இன்கிரீட் கவுஸ்கி” அவர்கள் ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்தவர்கள். இவர்கள் CMS நிறுவனத்தை நிறுவிய டாக்டர். ஹார்ஸ்ட் கவுஸ்கி-யின் மனைவி ஆவார். அனாதைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு தொண்டு நிறுவனம் தான் CMS. இவர் எப்போதும் ஏழை, எளிய, ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகளின் தேவைகளை சந்திப்பதிலும், அவர்களை பராமரிப்பதிலும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அக்குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டதுடன் உள்ளூர் பள்ளிகள் மூலம் கல்வியும் கற்பிக்கப்பட்டது. ஆன்மீக வாழ்விற்காக ஞாயிறு பள்ளிகள் நடத்தப்பட்டது. ஒரு முறை ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அப்போது இன்கிரீட் அவர்கள் அச்சிறுவனைக் கவனிப்பதிலேயே தன் நேரம் முழுவதையும் செலவிட்டார். மேலும் அந்த சிறுவன் வாந்தியெடுத்த போது இன்கிரீட் கவுஸ்கி அவர்கள் வாந்தியை கைகளில் ஏந்தினார்கள். அவனை சுத்தம் செய்து தன் கைக்குட்டையால் அவனைத் துடைத்து அரவணைத்தார்கள். சிறுமைப்பட்டவர்கள் மேல் அவர்களுக்கு இருந்த அன்பின் சிந்தையே 

இன்று வரை நாம் அவர்களை நினைக்க காரணமாயிற்று. 

 

இயேசு கிறிஸ்து எரிகோவிற்கு போகும்போது அநேகர் உடன் சென்றனர். அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், “...ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்” என்று கூப்பிட்டார்கள். அவர்கள் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டதும், ஜனங்கள் அவர்களை அற்பமாய் எண்ணி அதட்டுகிறார்கள். ஆனால் இயேசு நின்று அவர்களை அழைத்து வரச் சொல்லி அவர்களுடன் பேசுகிறார், “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்கிறார். இயேசுவுக்கு அவர்கள் பார்வையடைய விரும்புகிறார்கள் என்று தெரியும். ஆயினும் அவர்களுடன் பேசி அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.  

 

பிரியமானவர்களே! நானும் கூட சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறேன் என எண்ணுகிறீர்களோ? என் தேவைக்கு யாரிடம் செல்ல? யார் எனக்கு உதவி செய்வார் என எண்ணுகிறீர்களோ? உங்களுக்கு உதவ இயேசு உண்டு, உங்கள் கூப்பிடுதலுக்கு உடனே அவர் செவிகொடுத்து உங்களுக்கு உதவி செய்வார் மறவாதீர்கள். அதே வேளையிலே நன்றாயிருக்கும் அவரது பிள்ளைகளாகிய நாம் சிறுமைப்பட்டவர்களை சிந்தியாமல் இருக்கலாமா? சிறுமைப்பட்டவர்களை சிந்திப்போம். பரம தகப்பனின் பிள்ளைகளாய் பாக்கியவான்களாயிருப்போம்.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:

நமது மோட்சப் பயணம் தின தியான செய்திகள் 8 மொழிகளில் வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் மொழிபெயர்ப்பாளர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet jojobet holiganbet bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş