By Village Missionary Movement
Sunday, 08-Aug-2021இன்றைய தியானம்(Tamil) 08-08-2021 (Kids Special)
சுறுசுறுப்பாய் இரு
“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.” – நீதிமொழிகள் 6:6
காலையில் எழுந்து அம்மா செய்ய வேண்டிய எல்லா சமையல் வேலைகளையும் முடித்து விட்டு, ரோகித், ரோகித் ன்னு கூப்பிட்டாங்க. ரோகித் காலையில் எழுந்ததும் Cell phone -ஐ எடுத்து விளையாடிட்டு அம்மா கூப்பிட்ட சத்தம் கூட கேட்காமல் உட்கார்ந்திருந்தான். அம்மாவும் அவன் தூங்கி எழல போலன்னு நினைத்து Tea கொண்டு வந்தாங்க. என்ன ரோகித் முன்பெல்லாம் காலையில் எழுந்ததும் Brush பண்ணி Tea கேட்டு அம்மாவை தேடி வருவாயே, இப்பொழுதெல்லாம் ரொம்ப சோம்பேறியாகிவிட்டாய். Online Class 2 மணி நேரம் முடிந்ததும் T.V., Cell Phone ன்னு உட்கார்ந்து விடுகிறாய். சாப்பாடு, Snacks, தூக்கம்னு நாள் முழுதும் சோம்பேறியாகவே இருக்கிறாய். இப்படி இருக்கக் கூடாதுன்னு சொன்னதும் ரோகித்துக்கு கோபம் வந்தது.
Tea யை வாங்கிக் கொண்டு, என்னம்மா என்னோட வேலையை நானே தானே செய்கிறேன். Daily பல்தேய்க்கிறேன், சாப்பிடுகிறேன், Class attend பண்றேன் Test எழுதுறேன்.... போங்க மம்மின்னு சொல்லிட்டு, தோட்டத்தில் போய் உட்கார்ந்தான். அழகான பறவைகள் சத்தம், இயற்கையான தென்றல் காற்று வீச தோட்டத்தின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று காலில் எறும்பு கடித்து விட்டது. ஸ்... ஸ்... ஆ... எறும்பு கடித்து விட்டதே என்று கீழே பார்த்தான். நிறைய எறும்புகள் கூட்டம் கூட்டமா இருந்தது. தன்னை கடித்ததை நினைத்து காலாலே நசுக்கினான். எறும்புகள் வேறு வழியை கண்டுபிடித்து சுறுசுறுப்பாக போக ஆரம்பித்தது, சில எறும்புகள் ரோகித் காலில் ஏறிச் சென்றது. இதைப் பார்த்ததும் ரோகித் பாடம் கற்றுக்கொண்டான். நசுக்குனா கூட செத்து போயிடுற எறும்பு என்ன நடந்தாலும் தனக்கென்று ஒரு வழியை கண்டுபிடித்து சுறுசுறுப்பாக அதன் வேலையை செய்து கொண்டே இருக்கிறதே என்று சிந்திக்கத் தொடங்கினான். அம்மாவிடம் ஓடிப்போய் சொன்னான். நான் இனிமேல் எறும்பைப் போல சுறுசுறுப்பாக இருந்து, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்வேன், சோம்பேறியா இருக்க மாட்டேன்னு சொன்ன ரோகித்தை அம்மா பாராட்டினாங்க. எறும்பு மூலமா ரோகித்தை மாற்றினதற்கு நன்றி இயேசப்பான்னு சொன்னாங்க.
குட்டி செல்லங்களே! நீங்களும் சோம்பேறியா சாப்பிட, தூங்க, உங்க பெற்றோர் சொல்றதை கேட்காம இருக்கீங்களா? அது உங்க health க்கு நல்லதே கிடையாது. எனவே சிறுபிள்ளைகளாகிய நீங்கள் School ஆனாலும், Leave ஆனாலும் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கணும் சரியா.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250