Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-08-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 07-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 07-08-2021

 

ஜெயங்கொடுக்கும் தேவன் 

 

“...தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” - ரோமர் 8:31 

 

ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில் வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுகொண்டிருந்தனர். அந்த நேரம் அவர்களின் பேச்சு கடவுளைப் பற்றியதாக இருந்தது. அப்போது விவசாயியின் நண்பர், “நீர் எப்போதும் உமக்கும்-சாத்தானுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே. ஆனால் எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே” என்று கூறினார். அதற்கு அந்த விவசாயி, “நாம் இப்போது வேட்டையாடப் போகிறோம். அதில் இரண்டு வாத்துக்கள் அடிபட்டு, அதில் ஒன்று இறந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது. இதில் எதை நீர் பின்தொடருவீர்” என்று கேட்டார். அதற்கு நண்பர், “தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால் இறந்து கிடப்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமே!” என்று கூறினார். அப்போது விவசாயி, “நீர் இறந்துபோன வாத்து என்று சாத்தானுக்குத் தெரியும்” என்று கூறினார். 

 

யோபு தன் காலத்தில் வாழ்ந்தவர்களிலே, தேவனே மெச்சிக்கொள்ளும் அளவு நீதிமானாய் வாழ்ந்தார். அநேக பாராட்டுக்களையும் பெற்றார். அவனையும் சாத்தான் விட்டுவைக்கவில்லை. அவனுக்குரிய எல்லாவற்றையும் தேவனுடைய அனுமதியோடே பறித்துக்கொண்டான். சோதனைக்கு மேல் சோதனை! புலம்பி தவித்தார் யோபு. ஆயினும் கர்த்தர் யோபுவின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். 

 

இதை வாசிக்கின்றதான அன்பானவர்களே! கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்களைக் குறிவைத்து, சாத்தான் எப்போதும் தாக்குதல்களை அனுப்பிக்கொண்டே இருப்பான். ஏனென்றால் நாம் கர்த்தருக்கென்று எதையும் செய்ய துணிந்தவர்கள் என்றும் இவர்களை விட்டு வைத்தால், உலகத்தையே கலக்கி விடுவார்கள் என்றும் அவனுக்குத் தெரியும். அந்த பயத்தினால் அவன் எப்போதும் நம்மோடு போராடிக்கொண்டே இருப்பான். ஆனால் அவன் தோற்றுப்போனவன், அவன் ஒருநாளும் நம்மை ஜெயங்கொள்ளுவதில்லை. நாம் போராடி அவனை மேற்கொள்ளுவோம். ஏனென்றால் ஜெயக்கிறிஸ்து நம் பக்கம் இருக்கிறார். எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும், இப்படி ஆகிவிட்டதே என்று சோர்ந்து போகாதிருங்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக் கூறி ஜெயத்தை பெற்றுக்கொள்ளுவோம். 

- Bro. ஹனீஸ் சாமுவேல் 

 

ஜெபக்குறிப்பு:

நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al