By Village Missionary Movement
Friday, 06-Aug-2021இன்றைய தியானம்(Tamil) 06-08-2021
TATA… BYE… BYE
“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.” - யோவான் 14:18
இன்றைக்கு உலகத்தில் உள்ள உறவுமுறைகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. மிகவும் சாதாரணமாக ஒரு உறவுக்கு Tata.. Bye… Bye... என்று கூறிவிடுகிறார்கள். விசேஷமாக ஆண்களை நம்பி ஏமாறும் பெண்களும், பெண்களை நம்பி ஏமாறும் ஆண்களும் அதிகம். வாழ்க்கையின் இறுதிவரை கூடவே இருப்பேன் என்று கூறுவார்கள். ஆனால் பாதியிலே Tata காட்டி விட்டுப் போய்விடுவார்கள். அதிலும் இன்றைக்கு சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளைத் தொடங்கி ஆசை வார்த்தைகளைப் பேசிவிட்டு தன் காரியம் முடிந்தவுடன் Bye…Bye… சொல்லிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களுக்கு நாம் நம்மையும், நமது சந்ததியினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்வின் நாட்கள் நிறைவேறினபோது அவர் சீஷர்களுக்கு Tata காட்டி விட்டுப் போய்விடவில்லை. மாறாக என்றென்றைக்கும் நம்முடனே கூட இருக்கும்படி பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை நமக்காக அனுப்பினார். “உங்களிடத்தில் வருவேன்” என்றும் சொல்லியிருக்கிறார். இயேசுகிறிஸ்து தாம் சொன்னபடியே பிதாவினிடத்திற்கு சென்று பரிசுத்த ஆவியை அனுப்பினார். ஆவியானவர் நமக்குள் இருந்து சகல சத்தியத்திற்குள்ளும் அனுதினமும் நம்மை நடத்துகிறார்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! இயேசு கிறிஸ்துவைப்போல இந்த பூமியில் யாரும் நம்மை நேசிக்க முடியாது. அவர் நம்மைப் பாதி வழியில் கழட்டி விட்டு,
Tata... Bye… Bye... என்று சொல்லுகிறவர் அல்ல. ஆண்டவராகிய இயேசுவுக்கும் நமக்கும் இடையேயுள்ள உறவைக் குறித்து நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். காரணம், அவர் நம்மோடு இந்த பூமியில் வாழும் வாழ்க்கையில் மாத்திரமல்ல, பரலோக ராஜ்ஜியத்தை அடையும் வரையிலும் நம்மோடு இருந்து நம்மை நடத்துவார். ஆகவே நாம் கலங்கிடத் தேவையில்லை. நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் நம்மை புறம்பே தள்ளாமல் ஏற்றுக்கொண்டு வழிநடத்துபவர் இயேசு மட்டுமே, ஆகவே அவரையே சார்ந்து வாழ்வோம்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
குடிபோதைக்கு அடிமையாகி உள்ள மக்கள் விடுதலை பெற ஆரம்பிக்கப்பட்டுள்ள Peace Centre -க்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250