Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-08-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 04-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 04-08-2021

 

கிறிஸ்துவின் அன்பு 

 

“உயர்வானாலும், தாழ்வானாலும்,… நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” - ரோமர் 8:39

 

இரு கால்களும் இல்லாத ஜான்சன் என்ற வாலிபன் கிறிஸ்துவின் அன்பை உணராதவராக வாழ்ந்தார். ஒரு ஞாயிறு ஆராதனைக்கு வந்த செய்தியாளர் கிறிஸ்துவின் அன்பைக் கூறி ஜெபித்தபோது, தன்னை முழுவதும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். ஆராதனை முடிந்ததும் தன் இரு கைகளால் தவழ்ந்து வந்து போதகரிடம் தானும் கிராம ஊழியத்திற்கு வருவதாகக் கூறினார். 3 மணிக்கு செல்லும் கிராம ஊழியத்திற்கு 2.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். கைப்பிரதிகள், புதிய ஏற்பாடுகள், பைபிள், தண்ணீர் என எல்லாவற்றையும் வேனில் ஏற்றிவிட்டு ஜான்சனையும் தூக்கி ஏற்றிக்கொண்டு சென்றனர். கிராமத்திற்கு வந்ததும் எல்லாவற்றையும் ஒரு மரத்தடியில் இறக்கி வைத்துவிட்டு, ஜான்சனையும் மரத்தடியில் அமர வைத்துவிட்டு இரண்டு இரண்டு நபராக பிரிந்து சென்று கைப்பிரதிகளை கொடுத்து விட்டு சுவிசேஷம் அறிவித்து வந்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, ஜான்சனைக் காணவில்லை. வெகுநேரம் கழித்து ஜான்சன் சந்தோஷமாக தன் கைகளால் தவழ்ந்து கொண்டு வந்தார். ஒருவர் ஓடிச்சென்று தூக்கி விட்டு என்னவென்று கேட்டால், “பாவியாகிய என்னை கிறிஸ்து எவ்வளவாய் நேசிக்கிறார் என்று எல்லோருக்கும் சொல்ல வேண்டாமா? ஆதலால் நானும் வாயில் கைப்பிரதியை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் சொன்னேன்” என்றார்.  

 

கிறிஸ்துவின் அன்பை உணர்ந்த பவுல், “மரணமானாலும், ஜீவனானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் எதுவும் கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” என நிச்சயமாய் கூறுகிறார். மேலும் நம்மில் அன்புகூருகிற கிறிஸ்துவினால் இவையெல்லாவற்றையும் ஜெயங்கொள்ளவும் முடியும் என்கிறார். 

 

ஆம், பிரியமானவர்களே! நீங்கள் கிறிஸ்துவின் அன்பை இவ்வளவாய் உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது சிறு சிறு சூழ்நிலைகள், உடல் பெலவீனங்களைப் பார்த்துக்கொண்டு கிறிஸ்து என்னை நேசிக்கவில்லை, என்னை தள்ளிவிட்டார், என்னை மறந்து விட்டார் என கூறுகிறீர்களோ? இரண்டு கால்களும் இல்லாத ஜான்சன் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து வீடுவீடாக சென்று அதனை அறிவித்தும் வருகிறார். பவுல் எந்தச் சூழலிலும் கிறிஸ்துவின் அன்பை உணரமுடியும் என்றும், அவர் அன்பினால் எந்த சூழ்நிலைகளிலும் முடங்காமல் ஜெயங்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார். ஆண்டவரின் அன்பை உணர்ந்தவர்களால் சும்மா இருக்க முடியாது. நாம் ருசித்த அன்பை மற்றவர்களுக்கும் அறிவிக்க பிரயாசப்படுவோம். தேசம் தேவனை அறியட்டும்.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்  

 

ஜெபக்குறிப்பு: 

தினந்தோறும் You tube, Face book ல் வெளிவரும் வேதபாடத்தை அநேகர் பார்த்து ஆவிக்குரிய வாழ்வில் மேம்பட ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al