Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-08-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 03-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 03-08-2021

 

நீங்கள் விசேஷித்தவர்கள்

 

“ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” – மத்தேயு 10:31 

 

நம் தலையிலுள்ள மயிரின் எண்ணிக்கையை தேவன் அறிவார் என்பது நமக்கு எத்தனை ஆச்சரியத்தைத் தருகிறது. நம்மேல் இவ்வளவு அக்கறை கொண்டுள்ள தேவன் நம் உடல் உறுப்புகளையும், நமது உயிரையும் குறித்து எவ்வளவு அதிகமாக அக்கறை கொண்டிருப்பார் என்பதை எண்ணிப் பார்த்து கர்த்தரை நன்றியுடன் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கர்த்தரின் அனுமதியின்றி எவ்வித தீங்கும் நமக்கு நேரிடவே முடியாது. 

 

இப்பொழுதுள்ள இந்த கொடிய கொள்ளை நோய் நம்மை பயமுறுத்துகிறது, தடுப்பூசியிலும் பற்பல தடுமாற்றங்கள். அநேகரை இழக்கவும் கொடுத்துள்ளோம். இந்த நிலையிலும் தேவசித்தமில்லாமல் என் தேவன் என் வாழ்வில் எதையும் அனுமதிக்க விடமாட்டார் என்ற நிச்சயம், நாம் அவரோடு கொண்டுள்ள உறவில் மாத்திரமே உள்ளது. பாரங்கள், பிரச்சனைகள், வேதனைகள், மரணங்கள், நோய்கள் இருக்கும் காலங்களிலும் நன்மைகளை நாம் பார்க்க முடியும் அதை அனுபவிக்கவும் முடியும். ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் தேவனுக்கு நன்றி செலுத்த மறக்கக்கூடாது. 

 

நன்றி சொல்லுகிறவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்றால், 1. இரத்த அழுத்தம் குறைகிறது 2. நிம்மதியாக தூங்க முடிகிறது 3. ஆக்கப்பூர்வமான சிந்தனை கிடைக்கும் 4. எப்போதும் விழிப்புடன் செயல்படமுடியும் 5. மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவோம் 6. மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் 7. எளிதில் மன்னிக்கும் சுபாவம் ஏற்படும் 8. எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை குற்றம் கூற முடியாது. 

 

எனக்கன்பானவர்களே! தேவனுக்கு நன்றி செலுத்துதலின் மூலம் மேலே கூறிய அனைத்து நல்ல சுபாவங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்நாட்களில் நாமும் எல்லாக் காரியங்களையும், நம் கண்முன் கொண்டு வந்து, தேவனுக்கு முழு இருதயத்தோடு நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவோம். அவரைத் துதிப்பது என்பது நாம் அவரை நேசிப்பதின் அடையாளம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து என் தேவனை துதித்து, நேசித்து, அவர் தந்த சுவாசத்தால் வாழுவோம். தேவன் என் அடைக்கலம், என் துணை, என் பாதுகாப்பு, என் சுகம், என் ஆறுதல் என அவரில் நம்மை இணைத்து வாழுவோம்! அவருடைய பாதுகாப்பில் வாழும் நாம் விசேஷமானவர்களே! தேவசுகம் நம்மைக் காப்பதாக ஆமென். 

- Mrs. சரோஜா மோகன்தாஸ் 

 

ஜெபக்குறிப்பு:

மிஷனெரிப் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் செலுத்தப்பட தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet