Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02-08-2021
Share:

By Village Missionary Movement

Monday, 02-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 02-08-2021

 

இழந்ததை பெற்றுக்கொள்வோம் 

 

“...முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.” – யோவேல் 2:25 

 

கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட நாம் அனைவருமே அநேக காரியங்களை இழந்துள்ளோம். இந்த கொரோனா இரண்டாம் அலையில் சிலர் தங்கள் குடும்பத்தில் அருமையானவர்களை இழந்துள்ளனர். சிலர் நோயின் தாக்கத்தால் தங்கள் சரீர பெலனை, ஆரோக்கியத்தை இழந்துள்ளனர். சிலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய தொழில் செய்பவர்கள், அன்றாடம் சம்பாதித்து தங்கள் குடும்பத்தை நடத்துவோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநேகர் தங்கள் சம்பாத்தியத்தை இழந்துள்ளனர். இப்படி பலவித இழப்புகள் மத்தியில் இதற்கு விடிவுகாலம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆண்டவர் கொடுக்கும் வாக்குத்தத்தமான வார்த்தைகள் மனதை மகிழ்விக்கிறது. பச்சைக்கிளிகள், முசுக்கட்டைப் பூச்சிகள், பச்சைப்புழுக்கள் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்பத் தருவேன் என்று ஆண்டவர் கூறுகிறார். 

 

ஆகவே, நாம் நம் இன்றைய நிலையைக் குறித்து சோர்ந்துபோகவோ, மனமடிவாகவோ வேண்டாம். ஆண்டவர் தந்த இந்த வாக்குத்தத்தத்தை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். வாக்குரைத்த தேவன், வாக்கு மாறாதவர், பொருளாதார இழப்புகள் சரி செய்யப்பட்டு இரட்டிப்பான ஆசீர்வாதத்தை பெறப் போகிறோம். இழந்துபோன சரீர சுகத்தைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம். இது எப்படி கிடைக்கும்? ஆண்டவரின் வார்த்தைகளை விசுவாசித்தாலே போதும். 

 

இதை வாசிக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்வில் கொரோனா பட்சித்துப் போட்ட காரியங்கள் எவை? ஆரோக்கியமா, பொருளாதார நிலையா, தொழில் நஷ்டமா, அருமையானவர்களின் இழப்பா, வேலை இழப்பா, குடும்பத்தில் சமாதானமா? ஆண்டவர் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆண்டவர் கரத்தையும், அவரின் வாக்குத்தத்தங்களையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், கொரோனா பட்சித்த விளைவின் பலனை நமக்குத் திரும்பத் தருவார். அவர் கரத்தைப் பற்றிக் கொள்வோம், இழந்தவைகளைத் திரும்பப் பெற்று ஆண்டவரை மகிமைப்படுத்துவோம், ஆமென்.

- Mrs. புவனா தனபாலன் 

 

ஜெபக்குறிப்பு:

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியத்தில் தேவகரம் உடனிருந்து வழி நடத்த ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al