Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01-08-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 01-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 01-08-2021 (Kids Special)

 

சத்திய வேதம்

 

“நான்... பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்.” – சங்கீதம் 119:11

 

குட்டி செல்லங்களே! நல்லாயிருக்கீங்களா? வழக்கமா வருஷந்தோறும் மே மாதம் VBS -க்கு போய் ஜாலியா enjoy பண்ணுவீங்க. ஆனால் இப்போ Online VBS! அதிலும் நிறைய காரியங்கள் கற்றுக் கொண்டிருப்பீங்க, அப்படித்தானே. கற்றுக்கொண்டதை ஒவ்வொரு நாளும் உங்க வாழ்க்கையில கடைபிடிக்கணும் சரியா? 

 

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள் இருக்கிற பெரிய குடும்பத்தில் ஜோ என்ற குட்டித் தம்பி இருந்தான். துறு துறுன்னு விளையாடுவான். அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டே இருப்பான். அவங்க வீட்டுல இருக்கிற தாத்தா வேத புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டேயிருப்பார். இதைப் பார்த்த ஜோ, “என்ன தாத்தா ரொம்ப நேரமா இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டே இருக்கீங்க, உங்களுக்கு bore அடிக்கலையா? Exam எழுத போறீங்களா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான். “இல்லை தம்பி, இந்த Bible இயேசப்பா நமக்கு தந்த பொக்கிஷம். இதை வாசிக்கும் போது இயேசப்பா நம்ம கூட பேசுவாங்க. நிறைய காரியங்களை கற்றுக் கொடுப்பாங்க”ன்னு சொன்னாரு தாத்தா. அப்போ நானும் வாசிக்கிறேன்னு கேட்டதும் தாத்தா சின்ன பைபிள் ஒன்றைக் கொடுத்தார். 

 

ஜோ குட்டி சேர்ல உட்கார்ந்து பைபிளை வாசிக்க ஆரம்பித்தான். ஒன்றுமே புரியலை. “தாத்தா, தாத்தா நீங்க ரொம்ப வருஷமா இந்த பைபிளை படிக்கிறீங்களே மனப்பாடம் ஆயிடுச்சா” ன்னு கேட்டான். “மனப்பாடம் ஆகலைன்னாலும், இயேசப்பா என்கூட பேசுறதை உணர முடிகிறது. சரியான வழியில் நடக்க, தவறு செய்யாதபடி நம்மைக் காத்துக்கொள்ள இந்த வேதபுத்தகம் ரொம்ப உதவியா இருக்கும்” என்று சொன்னாங்க தாத்தா. “எனக்குத்தான் தாத்தா புரியவே இல்லை” என்று ஜோ சொன்னான். “அடுப்புக்கரி போட்டு வைக்கிற மூங்கில் கூடையை எடுத்துக்கொண்டு போய் நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற குளத்தில் தண்ணீர் கொண்டுவந்து செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்று ஜோ” என்று சொன்னாங்க தாத்தா. ஜோ-வும் மூங்கில் கூடையை எடுத்துக்கொண்டு போனான். அது அழுக்காக கருப்பு கலர்ல இருந்தது. குளத்தில் போய் தண்ணீர் அள்ளி ஒரு ஸ்டெப் வைக்கிறதுக்குள்ள, எல்லா தண்ணீரும் புஷ்ன்னு கீழே போயிடும். இப்படி நான்கு, ஐந்து முறை முயற்சி செய்தான். கூடையில் தண்ணீர் நிற்கவேயில்லை. கவலையோடே தாத்தாகிட்ட சொன்னான். “ஜோ, அந்த கூடையைப் பாரு, தண்ணீர் அதற்குள் நிற்கவில்லை என்றாலும் எவ்வளவு சுத்தமா இருக்கு.” “ஆமா, தாத்தா அழுக்கெல்லாம் போயிடுச்சே!” “இப்படித்தான் வேதத்தை வாசிக்க, வாசிக்க நம் இருதயத்திலிருக்கிற பாவ அழுக்கை கழுவி சுத்தமாக்கிடும்” னு தாத்தா சொன்னதை புரிந்து கொண்டு, நானும் இனி தினமும் வேதத்தை வாசிப்பேன் என்று தீர்மானம் பண்ணினான் ஜோ. 

 

அன்பு தம்பி, தங்கச்சி. ஜோ-வை போல நீங்களும் புரிந்து கொண்டீங்கன்னு நினைக்கிறேன். தினமும் வேதத்தை வாசிங்க, பரிசுத்தமா வாழுங்க. Ok வா.

-Sis. தெபோராள்           

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al