Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-07-2021 (Bible Characters Special)
Share:

By Village Missionary Movement

Wednesday, 28-Jul-2021

இன்றைய தியானம்(Tamil) 28-07-2021 (Bible Characters Special)

 

பர்னபா 

 

“...ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா... தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று,…” – அப். 4: 36, 37 

 

இயேசு கிறிஸ்து பரமேறியபின், சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் தேவ வசனத்தைத் தைரியமாய் சொன்னார்கள். அப்போது விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் அவர்களோடு இணைந்துகொண்டு தங்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்று அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தனர். அவற்றை அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். இந்நாட்களில் தன்னுடைய நிலத்தை விற்றுக் கொடுத்தவர் என்று வேதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் பர்னபா! இவர் ஒரு லேவியன். லேவியர்கள் தேவ ஊழியத்தை செய்பவர்களானதால் அவர்களிடம் பெரிய அளவில் சொத்துக்களோ, நிலங்களோ இருக்காது. தேவன்தான் அவர்கள் சொத்து. ஆகவே பர்னபாவிடம் மிக கொஞ்சமே இருந்திருக்கும். ஆனால் அவர் அதையும் விற்று அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார். ஆறுதலின் மகன் என்று அர்த்தம் கொள்ளும் பர்னபா பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவர். பின்நாட்களிலே, ஊழியப்பாதையில், பஞ்சத்தில் அவதியுறும் சகோதரர்களுக்கு பணம் சேகரிக்க மிகவும் ஆர்வமாய் ஈடுபட்டார். 

 

ஊழியர்களை ஊக்குவித்த பர்னபா: அந்நாட்களில்தான் பவுல் இரட்சிக்கப்பட்டு ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்தார். அவரது பழைய பொல்லாத வாழ்வைப் பார்த்தவர்கள் பவுலை சேர்த்துக்கொள்ள ஐயப்பட்டபோது, பர்னபா பவுலை எருசலேமிலுள்ள சீஷர்களுக்கு அறிமுகப்படுத்தினர். பவுலின் ஊழிய வாஞ்சைக்கு பர்னபாவே சாட்சியாக விளங்கினார். அற்பமாய் எண்ணப்பட்ட மாற்குவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு சிறந்த ஊழியக்காரனாய் உருவாக்கினார். பர்னபா லேவியனானபடியால் வேதத்தை முறையாய் கற்றிருப்பவராயினும் திறமை வாய்ந்த பவுலுக்கு இடம் கொடுத்து தான் முதன்மையானவன் என்ற பெருமை கொள்ளாமல் பின்னணியில் நின்று பவுலுக்கு ஊக்கமளித்தார். பேதுருவும், பவுலும் இரத்த சாட்சியாக மரித்த பின்பு அங்கிருந்த விசுவாசிகள் சிதறினர். அவர்களுக்கு ஆறுதலளித்து உற்சாகமூட்டினர். பின்வாங்கிப் போன கிறிஸ்தவர்களை கடிந்துகொண்டார்.

 

பிரியமானவர்களே! தனக்குள்ள கொஞ்சத்தையும் கொடுத்த குணம், ஊழியர்களை உருவாக்கியது, விசுவாசிகளை உற்சாகப்படுத்தியது. பின் தேவனுக்காக இரத்தசாட்சியாய் மரித்தது என அவரின் சுபாவத்தைக் குறித்து தியானித்த நாமும் நம்மை முழுவதுமாக தேவனுக்கென்று அர்ப்பணிப்போமா?

- Mrs. ஜோதி ஆனந்த் 

 

ஜெபக்குறிப்பு:

New Life Home ல் இருக்கும் பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.   

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al