Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  23-07-2021 (Bible Characters Special)
Share:

By Village Missionary Movement

Friday, 23-Jul-2021

இன்றைய தியானம்(Tamil)  23-07-2021 (Bible Characters Special)

 

தானியேல்

 

“...தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.” – தானியேல் 6

 

நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய ராஜா எருசலேமை முற்றுகையிட்டு அங்குள்ள இளமை துடிப்புள்ள, திறமைமிக்க வாலிபர்களை பாபிலோனுக்கு சிறையாக கொண்டு சென்றான். அவர்களுள் தானியேல் என்ற யூத வாலிபனும் ஒருவன். பாபிலோனிலுள்ள உணவு முறை, பழக்கவழக்கங்கள் அனைத்தையும் கவனித்த தானியேல் இவைகளால் என்னை தீட்டுப்படுத்தமாட்டேன் என்று தன் இருதயத்தில் ஒரு தீர்மானம் பண்ணினார். தன்னை கவனிக்கவோ, கண்டிக்கவோ குடும்பத்தினர் அருகில் இல்லை என்ற எண்ணம் அவரை வழிமாறச்செய்யவில்லை. மாறாக திட்டமான தீர்மானத்தை எடுத்தார். ஊரைவிட்டு, நாட்டை விட்டு தூரமான ஒரு இடத்திற்கு சென்றாலும் தேவனை விட்டு தூரம் போகாமல் வாழ்ந்தார். தானியேல் அங்கு தேவனுக்காக வைராக்கியமாக நின்றதினிமித்தம், பல சோதனைகள் பாடுகளினூடே கடந்து வந்த போதிலும் எதுவும் அவரை சேதப்படுத்தவில்லை. தானியேலின் ஜெபவாழ்வும், தேவனுக்குப் பயப்படும் பயமும் அவர் ராஜாவுக்கு அடுத்தபடியாக உயர்த்தப்பட முக்கிய காரணமாயிற்று

 

இன்றைய வாலிபர் முகாம்களில் தானியேலை செய்தியாளராக அழைத்தால் அவர் என்ன பேசுவார்? “வாலிபரே! நான் ஒரு அடிமையாக தூர இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைப்போல நீங்கள் படிப்பின் நிமித்தமாகவோ வேலை காரியமாகவோ உங்கள் பெற்றோரை விட்டு தூர இடத்தில் இருக்கலாம். தொலைபேசி, வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளும் உங்கள் பெற்றோரோடு நீங்கள் நல்லவர்களைப் போலவே பேசலாம். உங்கள் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் கூட வேதவசனமே இருக்கலாம். ஆனால் தேவனை தேடும் இருதயமும், சுற்றியுள்ள அசுத்தமான காரியத்தால் என்னை தீட்டுப்படுத்தமாட்டேன் என்ற தீர்மானமோ உங்கள் இருதயத்தில் உண்டா? ஆலயமில்லாத, விசுவாசிகளின் ஐக்கியமில்லாத, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத இந்த இடத்தில் தேவனோடுள்ள உறவு மாத்திரமே உங்களை பத்திரமாய் பாதுகாக்கும். வேலை ஸ்தலத்தில் நான் உயர்த்தப்படுவதை பொறுக்கமாட்டாமல், என்னோடு பணி செய்பவர்கள் பொறாமை கொண்டு சதித் திட்டம் தீட்டியும் நான் எதற்கும் அஞ்சவில்லை. பத்திரத்திற்கு கையெழுத்து போட்டாயிற்று என தெரிந்தும், என் மாடி ரூமிற்கு போய் ஜன்னல்களைத் திறந்து எருசலேமைப் பார்த்து நான் எப்போதும் செய்த பழக்கத்தின்படியே ஜெபித்தேன். ஆம், தேவனுடைய காரியம் என்று வருமானால் ராஜாவுக்கல்ல, ராஜாதி ராஜாவாம் தேவனுக்கே கீழ்ப்படியவேண்டும். நீங்கள் வேலைசெய்யும் இடத்தில் தேவனுக்கென்று வைராக்கியமாய் வாழுங்கள். என் காரியத்தை ஜெயமாய் மாற்றிய தேவன் உங்கள் வாழ்விலும் ஜெயத்தைக் கட்டளையிடுவார். மீண்டும் உங்களை பரம கானான் தேசத்திலே சந்திக்க ஆவலாயிருக்கிறேன்.

- J. பவுல்ராஜ்

 

ஜெபக்குறிப்பு

Media ஊழியங்களில் பணி செய்யும் ஊழியர்களை தேவன் ஞானத்தினால் நிரப்பி பயன்படுத்த ஜெபியுங்கள்

 

*Whatsap

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.

Email: reachvmm@gmail.co

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorg

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movemen

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 9325t)inmin.p:*.: ” . :28  67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş casibom casibom giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş jojobet alobet alobet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş jojobet jojobet giriş pashagaming tarafbet editörbet perabet perabet giriş grandbetting hitbet xslot betkom giriş sweet bonanza betkanyon giriş perabet perabet giriş jojobet holiganbet jojobet cratosroyalbet betgit jojobet betpuan gameofbet grandpashabet grandpashabet teosbet holiganbet Hiltonbet Hiltonbet giriş grandpashabet imajbet matbet