Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-07-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 18-Jul-2021

இன்றைய தியானம்(Tamil) 18-07-2021 (Kids Special)

 

பேசும் தேவன் 

 

“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” – மத்தேயு 5:8 

 

ஹாய் குட்டி செல்லங்களா! எப்படி இருக்கீங்க? உங்க வீட்டில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கை யாராவது இருக்காங்களா? அவர்களோடு அடி, உதை, சண்டை, சமாதானம்னு உங்க வீடே கலகலப்பா இருக்குமே. ஆனால்... உங்களமாதிரி குட்டீஸ் இல்லாத வீடு எப்படியிருக்கும்? அமைதியா வெறுமையாதானே இருக்கும். இப்படித்தான் அன்னாள் Aunty வீடும் வெறுமையாய் இருந்தது. தனக்கு ஒரு குழந்தை இல்லையே என ரொம்ப கவலைப்பட்டாங்க. ஆலயத்திற்கு சென்று கண்ணீரோடு ஜெபம் செய்தார்கள். ஆண்டவரே! நீர் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், அதை உமக்கே கொடுப்பேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபத்தை முடிச்சாங்க. ஜெபித்த பிறகு, குழந்தையில்லாததை நினைத்து அன்னாள் கவலைப்படவே இல்லை. 

 

தேவன் ஜெபத்தைக் கேட்டு ஒரு அழகான ஆண்குழந்தையைக் கொடுத்தார். அந்த குழந்தையை அன்னாள் அத்தை ரொம்ப நேசித்தார்கள். குழந்தையின் அப்பா எல்க்கானாவும் ரொம்ப செல்லமாக வைத்துக்கொள்வார். அவனுக்கு சாமுவேல் என்று பெயர் வைத்தார்கள். குழந்தை நன்றாக ஓட ஆரம்பித்தான். வளர்ந்து கொஞ்சம் பெரியவனானவுடன் தூரத்திலுள்ள சீலோவிலே தான் ஜெபித்த ஆலயத்திற்கு சாமுவேலை கூட்டிக்கொண்டு போனாங்க. அந்த ஆலயத்தில் பொறுப்பாயிருந்த ஏலி தாத்தாவிடம் விட்டுவிட்டு, ஆண்டவரிடம் சொன்ன பொருத்தனையை நிறைவேற்றினார்கள். சாமுவேல் கொஞ்சம் அழுதான். ஏலி தாத்தா அவனை நன்றாக பார்த்துக்கொண்டார். சாமுவேல் ஆலயத்தின் கதவு, ஜன்னலை துடைத்து, திறப்பது, ஆராதனைக்குப் பாய் விரிப்பது என தாத்தா சொல்கிற எல்லா வேலையையும் சந்தோஷமாய் செய்துவந்தான். ஒருநாள் இரவு சாமுவேல் படுத்திருக்கும்போது யாரோ சாமுவேலே என்று கூப்பிட்டதுபோல் இருந்தது. அவன் எழுந்து ஏலி தாத்தாவிடம் போய், “என்னை கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான். “நான் கூப்பிடவில்லை! நீ போய் தூங்கு” என்றார். இரண்டாவது, மூன்றாவது முறையும் அப்படியே சத்தம் கேட்டது. ஏலி தாத்தாவிடம் போய், “தாத்தா கூப்பிட்டீங்களா?” என்றான். “இல்லையேப்பா” என்று கூறிவிட்டு தாத்தா யோசித்தார். ஆண்டவர்தான் அவனை கூப்பிட்டிருக்கிறார் என்று உணர்ந்து, “திரும்பவும் சத்தம் கேட்டால் கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்று சொல்” என்றார். சாமுவேல் போய் படுத்துக்கொண்டான். திரும்பவும் “சாமுவேலே, சாமுவேலே” என்று கூப்பிடும் சத்தம் கேட்டவுடன், அவன் எழுந்து, “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” என்று தேவனோடு பேசினான். அந்த இடத்திலே நடக்கப் போகிற பல காரியத்தை ஆண்டவர் சாமுவேலோடு பேசினார். 

 

குட்டீஸ், உங்களோடு இயேசப்பா பேசணும்னு ஆசையா இருக்கா, நீயும் இயேசுவின் குரலைக் கேட்கமுடியும். எப்போது தெரியுமா? உன் வாழ்வு பரிசுத்தமாய், சாமுவேல் போன்று இயேசுவுக்கும், மனுஷருக்கும் பிரியமாய் நடக்கும்போது இயேசப்பாவின் சத்தத்தைக் கேட்கமுடியும். Ok. 

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş casibom casibom giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş jojobet alobet alobet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş jojobet jojobet giriş pashagaming tarafbet editörbet perabet perabet giriş grandbetting hitbet xslot sweet bonanza betkom giriş sweet bonanza betkanyon giriş perabet perabet giriş jojobet holiganbet jojobet cratosroyalbet betgit jojobet betpuan gameofbet grandpashabet grandpashabet teosbet holiganbet Hiltonbet Hiltonbet giriş grandpashabet imajbet matbet