Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-07-2021 (Bible Characters Special)
Share:

By Village Missionary Movement

Monday, 12-Jul-2021

இன்றைய தியானம்(Tamil) 12-07-2021 (Bible Characters Special)

 

தாவீது

 

“...அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” – 2 சாமுவேல் 16:11 

 

தாவீதை அவரது சொந்த மகனாகிய அப்சலோம் கொல்ல வகைதேடும் போது, அவனுக்கு பயந்து தாவீது ராஜா கால்நடையாய் ஓடிய நேரத்தில் சவுல் வீட்டு வம்சத்தானாகிய சீமேயி, தாவீதை தூஷித்து கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வருகிறான். “இரத்தப்பிரியனே தொலைந்து போ” என்று அவன் தூஷித்த வார்த்தைகள் வெந்த புண்ணில் ஈட்டியை வைத்து குத்தியதைப் போலிருந்தது. தாவீதோடிருந்தவர்கள் சீமேயியின் தலையை வாங்க துடித்தபோதிலும், தாவீதோ காரியங்களை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து, “அவன் அப்படி தூஷிக்கவே கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்” என்றார். “என்னை காரணமின்றி தூஷிக்கிற அவனுக்கு கர்த்தர் தீமையை சரிக்கட்டுவார்” என்று சொல்லாமல், “இந்த நிந்தைக்கு பதிலாக கர்த்தர் எனக்கு நன்மையை சரிக்கட்டுவார்” என்றே சொல்லுகிறார். தாவீதின் செம்மையான இருதயத்தைப் பாருங்கள். 

 

ஆனால் இன்றைக்கு பிரசங்க மேடைகளில் சொல்லப்படும் காரியமென்ன? “உன் எதிராளியை கர்த்தர் பழிவாங்குவார். பழிவாங்குதல் அவருக்குரியது” என்று கூறி, எதிராளியை நேசிக்க கற்றுக்கொடுத்த இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தை மாற்றி, அவர்கள் எப்போது விழுவார்கள், எப்போது ஆண்டவர் அவர்களை பழிவாங்குவார் என்ற சிந்தையோடு பார்க்கிற மனநிலையை உருவாக்கி விட்டனர். அப்படியென்றால் புறமதத்தவருக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நமக்கு ஒரே ஒரு எதிரி உண்டு. அது பிசாசானவன்தான்! 

 

பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறுவதென்ன? அவர் வையப்படும்போது பதில் வையவில்லை. பாடுபடும்போது பயமுறுத்தவில்லை. நியாயமாய் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார். இதே சிந்தை தாவீதிடத்திலும் காணப்பட்டது. நாமும் இப்படிப்பட்ட சுபாவத்தை வெளிப்படுத்துவோம். எத்தனை சீமேயிக்கள் எழும்பினாலும், “ஆண்டவரே இந்த நிந்தையை எனக்கு நன்மையாய் மாற்றும்” என்றே ஜெபிப்போம். பின்நாட்களில் சீமேயியை தண்டிக்க வாய்ப்பு ராஜாவாகிய தாவீதிற்கு வந்த போதிலும் அவனை மன்னித்தாரே! (2சாமு.19:23) சொல்லிக்காட்டவோ குத்திக்காட்டவோ விரும்பாமல் இயல்பாய் நடந்து கொண்ட தாவீது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியல்லவா? ஆம், புறஜாதிமக்களின் முன் நாம் தெய்வீக சுபாவத்தை வெளிப்படுத்துவோம். ஆண்டவர் துணைபுரிவாராக.

- T. சாமுவேல் 

 

ஜெபக்குறிப்பு:

நமது மோட்சப் பயணம் தின தியான செய்திகள் 8 மொழிகளில் வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் மொழிபெயர்ப்பாளர்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al