Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-07-2021(Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 04-Jul-2021

இன்றைய தியானம்(Tamil) 04-07-2021(Kids Special)

 

மலையில் நடந்த அற்புதம் 

 

“...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” - 2கொரி. 9:7 

 

அது ஒரு வனாந்தரமான இடம். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் உட்கார்ந்து மிக கவனமாக இயேசப்பாவோட பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாங்க. அங்கு உள்ள ஒரு குட்டி மலை மேலே நம்ப ஜீசஸ் உட்கார்ந்து மனதுருகி ஜனங்களிடம் பேசிக்கொண்டிருந்தாங்க. சின்ன பிள்ளைகள் கூட எந்த குறும்பும் பண்ணாமல் கவனமா இயேசப்பா வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆக எல்லாருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது. குட்டீஸ் எல்லாம் லைட்டா சிணுங்க ஆரம்பிச்சாங்க. 

 

அப்போது இயேசப்பா தமது சீஷர்களில் ஒருவரான பிலிப்புவை கூப்பிட்டு “இவங்களுக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கவேண்டும். அப்பங்களை எங்கே வாங்கலாம்?” என்று கேட்டார். “ஆண்டவரே, ஐயாயிரம் பேருக்கும் அதிகமான ஜனங்கள் இருக்கிறார்களே, 200 பணத்திற்கு வாங்கினாலும் போதாதே” என்றார் பிலிப்பு. அப்போது அந்திரேயா அண்ணன் கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு சிறு பையனைக் கையோடு கூட்டிக்கொண்டு இயேசப்பாவிடம் வந்து, “இந்த பையனிடம் 5 அப்பங்களும், 2 மீன்களும் இருக்கின்றன” என்றார். அவன் கையில் இரண்டு அடுக்கு டிபன் கேரியருடன் சிரித்துக்கொண்டே வந்து இயேசுவிடம் அதைக் கொடுத்தான். கூடியிருந்தவர்கள் மெதுவாக தங்கள் பிள்ளைகளின் காதுகளில் ஏதோ முணுமுணுத்தார்கள். ஒரு அம்மா தன் மகனிடம், “உன்னிடம் இருந்தா நீ கொடுத்திருப்பாயா? பாரு அந்த தம்பிய, எவ்ளோ நல்ல பையனா இருக்கான்” என்றார்கள். ஆனாலும் இது 5000 பேருக்கு கொடுக்க போதுமா? இல்லைல்ல. So, Jesus அதை கையில் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து ஜெபம் பண்ணி, அதை சீஷர்களிடம் கொடுத்து, எல்லாரையும் வரிசைவரிசையாய் உட்கார வைத்து, “இந்த உணவை பரிமாறுங்கள்” என்றார். சீஷர்கள் அப்படியே செய்தனர். என்ன ஆச்சரியம்? எடுக்க எடுக்க அப்பமும் மீனும் குறையாமல் வந்துகொண்டே இருந்தன. மீன் பிரியர்களெல்லாம் வாங்கி வாங்கி சாப்பிட்டாங்க. எல்லாரும் சாப்பிட்டது போக மீதி 12 கூடை நிறைய எடுத்தாங்க. 

 

அந்த சின்ன பையனை பார்த்தவங்களெல்லாம் அவன் கையை பிடிச்சி குலுக்கினாங்க. சிலர் கன்னத்தை அன்போடு தொட்டு முத்தங்குடுத்தாங்க. சிலஅண்ணாச்சிமார் அவன் முதுகை தட்டிக்கொடுத்து Very Good சொன்னாங்க. உனக்கென்று ஒன்றுகூட எடுத்துக்காம அப்படியே கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது? என்று ஆளாளுக்கு அவனை மெச்சிக்கொண்டாங்க. 

 

குட்டிப்பிள்ளைகளே! நீங்களும் இயேசப்பாவுக்கு கொடுக்கலாம். எதை, எப்படி, எங்கே கொடுக்க? என்று கேட்கிறாயா? ஒரு மண் உண்டியல் வாங்கி, அதிலே உன் அம்மா, அப்பா உனக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை சேர்த்து வை. அதை நம்மைவிட கஷ்டப்படுகிறவங்க படிக்கமுடியாதவங்களுக்கு கொடுக்கலாம். அது மாத்திரமல்ல உன்னோட ஊருக்கு ஊழியம் செய்ய வரும் ஊழியரிடம் கொடுத்து ஊழியத்திற்கு பயன்படுத்தும்படி கொடுக்கலாம். கொஞ்ச காசுதானே இதை எப்படி கொடுக்க என்று நினைக்காதே, 5 அப்பமும் 2 மீனும்தானே எல்லாருக்கும் எப்படி பத்தும் என்று அந்த தம்பி நினைக்கல. எதுவானாலும் இயேசப்பா கைகளில் கொடுக்கப்பட்டால் அது ஆசீர்வதிக்கப்படும். என்ன உண்டியல் வாங்க ரெடியா? 

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al