By Village Missionary Movement
Sunday, 27-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 27-06-2021 (Kids Special)
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;...” - 1 தெச. 5:18
Dear குட்டீஸ்! எப்படி இருக்கீங்க? ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க என்று நினைக்கிறேன். ஏன்னா, ஸ்கூல் கிடையாது, எவ்வளவு நேரம்னாலும் தூங்கலாம். ஜாலியாக விளையாடலாம். Exam கிடையாது. இது உங்களுக்கு பெரிய மகிழ்ச்சிதானே. School எப்போ திறக்கும் என்றே தெரியாது. தூங்க, எழும்ப, விளையாட அப்பப்பா உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு யாருக்குமே கிடைக்கவில்லை. ஆனா கவனமா இருக்கணும். தேவையில்லாம வெளியே போகக்கூடாது. கை, கால், முகத்தை சுத்தமா கழுவணும், கண்டதையும் கடையில் வாங்கி சாப்பிட கூடாது. Ok! T.V. Cellphone பார்த்து கண்ணை கெடுத்துவிடக்கூடாது. இயேசப்பாவுக்கு பிரியமான காரியத்தை செய்யணும். சரி கதை கேட்கலாமா?
ஒரு அடர்ந்த காட்டுப்பக்கத்தில் சின்ன கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் விறகுவெட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரும் மனைவி, மகன் என்று மூன்றுபேரும் சேர்ந்து காட்டிற்கு சென்று விறகுவெட்டி அதை விற்று தங்கள் பிழைப்பை நடத்திக்கொண்டு வந்தார்கள். கூலி வேலை செய்தாலும் கடவுள் பக்தியுடையவர்கள். ஆண்டவரே இந்த நாளுக்குரிய நன்மைகளை எங்களுக்கு தாரும் என்று ஜெபிப்பார்கள். ஒருநாள் விறகு வெட்டிக்கொண்டு வரும்போது குட்டி குதிரை ஒன்று அவர் பின்னாடியே வந்துவிட்டது. அதைக் கட்டி வைத்து ஆகாரம் கொடுத்து அன்பாய் கவனித்து வந்தார். சில மாதங்களிலே நன்றாக கொழுகொழுவென்று வளர்ந்தது அந்த குதிரை. இரதங்களில் பூட்டி ஓட்டுவதற்கு எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறோம் என்று அந்தக் குதிரையை விலைக்கு கேட்டார்கள். இல்லை நான் தரமாட்டேன் என் பிள்ளையைப் போல் இந்த குதிரையை வளர்த்துவிட்டேன். இது கடவுள் தந்த பரிசு என்று கொடுக்க மறுத்துவிட்டார். ஊராரெல்லாம் திட்டினார்கள். இவன் பிழைக்கத்தெரியாதவன், ஏமாளி என்று சொன்னார்கள். ஒருநாள் இரவு குதிரை காணாமல் போய்விட்டது. எல்லாரும் சிரித்தார்கள். எல்லாம் நன்மைக்கே, ஆண்டவர் எதைச் செய்தாலும் அது நன்மையாகவே இருக்கும் என்று நன்றி சொல்லிக்கொண்டேயிருந்தார்.
ஒருநாள் அதிகாலையிலே ஒரே பரபரப்பு. கதவைத் திறந்து பார்த்தால் அவரது வீட்டிற்கு முன் தொலைந்து போன குதிரையோடு சேர்த்து 12 குதிரைகள் நின்றது. ஊரே ஆச்சரியப்பட்டுப் போனது. குதிரை ரேஸ், குதிரை சவாரி என்று குதிரைகளை பழக்குவித்தார். இதன் மூலம் ஆண்டவர் அவருடைய குடும்பத்தை ஆசீர்வதித்தார். எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாமல் ஆண்டவருக்கு நன்றி சொன்னதால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதை அந்த கிராமத்து ஜனங்கள் அறிந்துகொண்டார்கள்.
செல்ல பிள்ளைகளே! நீங்களும் உங்க குடும்பத்தில் ஏற்படும் (தீமையான) கஷ்டமான நேரத்திலும் ஆண்டவருக்கு நன்றி சொல்ல பழகிக்கொண்டால் தீமைகளையும் தேவன் நன்மையாக மாற்றுவார். என்ன செய்வீங்கதானே!
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250